முகப்பு /செய்தி /மதுரை / பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற 4 பெண்கள்.. மதுரையில் பரபரப்பு!

பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற 4 பெண்கள்.. மதுரையில் பரபரப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai arrest | உசிலம்பட்டியில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை தூக்கி சென்று மதுரையில் ஒருவருக்கு விற்க முயன்ற போது பிடிபட்டனர்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தையை விற்க முயன்ற செவிலியர், மூதாட்டி உள்ளிட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் வார்டு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் மூதாட்டி ஒருவர் பச்சிளங் குழந்தையுடன் சுற்றி வந்துள்ளார். அவரிடம், குழந்தை குறித்து மருத்துவமனை காவல்நிலைய போலீசார் கேட்டதற்கு அது தன் மகளுடைய குழந்தை என்றும், பிறந்து மூன்று நாட்களே ஆன நிலையில் அதற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பெற வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிலில் சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் உசிலம்பட்டி நடுபட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பதும், அந்த குழந்தை உசிலம்பட்டியை சேர்ந்த கணவன் இல்லாத ஒரு பெண்ணுக்கு பிறந்ததாகவும், அப்பெண்ணால் குழந்தையை பராமரிக்க முடியாததால், அருகிலிருந்த தனியார்  செவிலியர் ஒருவர் வழியாக தனக்கு குழந்தை கிடைத்ததாகவும், அதனை மதுரையில் உள்ள அவரது இளையசகோதரி சின்ன பாண்டியம்மாளிடம் கொடுக்க வந்ததும் தெரியவந்தது.

top videos

    இது குறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, செவிலியர் மாலதி, பாண்டியம்மாள் மற்றும் அவரது மகள் அழகு பாண்டியம்மாள், இளையசகோதரி சின்ன பாண்டியம்மாள் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    First published:

    Tags: Crime News, Local News, Madurai, New born baby