முகப்பு /மதுரை /

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய மதுரை ரயில் நிலையம்.. பயணிகள் நிம்மதி!

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய மதுரை ரயில் நிலையம்.. பயணிகள் நிம்மதி!

X
மீண்டும்

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய மதுரை ரயில் நிலையம்

Madurai Railway station | மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து, மீண்டும் அனைத்து வகையான ரயில்களும் இயங்க ஆரம்பித்துவிட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையிலும், கடந்த ஒரு மாதமாக இரட்டை ரயில்வே பாதை பணிகள், ரயில் ட்ராக்கை சரி செய்யும் பணிகள், சிக்னல் சரி செய்யும் பணிகள் போன்றவை நடைபெற்று வந்தன. இதனால் பல்வேறு ரயில்கள் அதாவது, தேஜாஸ் ரயில், பாண்டியன் எக்ஸ்பிரஸ், மதுரை டு நாகர்கோவில், பாலக்காடு என எல்லா ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கடந்த ஒரு மாதமாக மதுரை ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் ரயில் போக்குவரத்து இல்லாமல் மதுரை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார். ஆனால் தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்து மார்ச் 7ம் தேதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரயில்கள் இயங்க ஆரம்பித்தன. முதலில் வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், மதுரை டு சென்னை தேஜாஸ் ரயில் மற்றும் சில மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் இயங்க தொடங்கின. ஆனால், பாலக்காடு, திருச்செந்தூர், அருப்புக்கோட்டை போன்ற சில ரயில்கள் இங்கிருந்து இயக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில், மதுரை வழியாக ரத்து செய்யப்பட்ட அனைத்து விதமான ரயில்களும் மீண்டும் பழைய மாதிரியே இயங்க தொடங்கியுள்ளன. அதன்படி மதுரை ரயில் நிலையம் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

First published:

Tags: Local News, Madurai, Southern railway