மதுரையில புதிதாக பஜார் ஒன்னு ஓபன் பண்ணி இருக்காங்கன்னு சொன்னா உங்களால நம்ப முடியுமா?, ஆமாங்க மதுரை புது ஜெயில் ரோடு பகுதியில் இருக்கக்கூடிய மதுரை மத்திய சிறைச்சாலை சார்பாக தான் prison bazaar என்ற பஜார் ஓபன் பண்ணி இருக்காங்க.
இந்த பஜார் ஓப்பன் பண்ணதுக்கான குறிக்கோள் என்னன்னு பார்த்தீங்கன்னா, மதுரை மத்திய சிறைச்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இருக்காங்க. இங்குள்ள கைதிகளுக்கு மறுவாழ்வை மையமாக கொண்டு சிறைத்துறை சார்பாக மத்திய சிறைச்சாலையிலேயே விவசாயம், துணி நெய்தல் இனிப்பு, பலகாரம் செய்தல் போன்ற வேலைகள் செய்யப்பட்டு அந்த பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த prison பஜார ஓபன் பண்ணி இருக்காங்களாம்.
இந்த பஜாரோட தனித்தன்மை என்னன்னா சிறை கைதிகளாலையே இயற்கையான முறையில் தயார் பண்ணி, அவங்க தயார் பண்ண பொருட்களை சிறை கைதிகளே விற்பனை பண்ணிட்டு வராங்க. அப்படி இந்த பஜாரல என்னென்ன இருக்குனா, மினி பேக்கரி மாதிரி காராபூந்தி, சேவு, முறுக்கு, தட்டு வடை, சீவல், மிக்சர், ஸ்வீட்ஸ்ல அதிரசம், அல்வா, லட்டு, குலோப்ஜாம் போன்ற பொருட்களும் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட வாழைப்பழம் வடகம் இதெல்லாம் வச்சிருக்காங்க.
இதுபோக சிறை கைதிகளாலேயே தயாரிக்கப்பட்ட செக்கு எண்ணெய்களான நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளும், கைதிகளினாலே நெய்யப்பட்ட ஷர்ட், போர்வை, தலையணை உறை, டவல், கைலி, சுங்குடி சேலைகள், கர்ச்சீப், ஃப்ளோர் மேட் போன்ற துணிவகைகளும் தரமான வகையில குறைந்த விலைக்கு விற்பனை செய்றாங்க.
ALSO READ | ஒரு மீனில் இத்தனை வெரைட்டியா? மதுரையில் கிராமத்து சுவையில் அட்டகாசமான அசைவ ஹோட்டல்!
மேலும், காலையும் மதியமும் இந்த பஜாருக்கு போனோம்னா சிறை கைதிகள் மூலமாகவே தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை, பொங்கல், சட்னி சாம்பாருடனும் மதியத்துக்கு இரண்டு வகை பொரியலுடன் சாம்பார், ரசம் அப்பளம், கத்திரிக்காய் குழம்புடன் குறைந்த விலையில் அதாவது 80 ரூபாயிலிருந்து சுவையான சாப்பாடு கொடுத்துகிட்டு இருக்காங்க.
இப்படி முழுக்க முழுக்க சிறை கைதிகளாலையே தயாரிக்கப்பட்டு, சிறை கைதிகள் மூலமாகவே இயங்கக்கூடிய இந்த prison பஜார்ல வரும் லாபத்தில் 20% சிறை கைதிகளுக்கு வருமானமாக வழங்கப்படுமாம். அப்புறம் என்னங்க, நீங்களும் இந்த பிளேஸ்க்கு போனீங்கன்னா இப்படி இயற்கையான முறையிலும் தரமான வகையிலையும் குறைந்த விலையிலும் விற்பனை பண்ணப்படும் prison bazaar- ல் தேவையானதை வாங்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai