முகப்பு /மதுரை /

கள்ளழகர் சுற்றிவரும் மதுரை பொய்கைகரைப்பட்டி தெப்பக்குளத்தின் வரலாறு தெரியுமா?

கள்ளழகர் சுற்றிவரும் மதுரை பொய்கைகரைப்பட்டி தெப்பக்குளத்தின் வரலாறு தெரியுமா?

X
பொய்கரைப்பட்டி

பொய்கரைப்பட்டி குளம்

Madurai | மதுரை பொய்கைகரைப்பட்டியிலுள்ள பிரம்மாண்ட குளம்தான் அந்த கிராம மக்களின் ஆதாரமாக உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவில் மலையின் அடிவாரத்தில் உள்ள அலங்காநல்லூர்-அழகர் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள இடம் தான் பொய்கைகரைப்பட்டி. இக்கிராமத்தின் மையப்பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. கிராமத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை இக்குளமே காட்சியளிக்கின்றது.

இக்கிராமத்தின் மூதாதையரான நாச்சையார் அம்மா என்ற ஒருவர் தான் இக்குளத்தை கட்டியதாகவும், இந்த பொய்கையை வைத்து தான் இவ்வூருக்கு பொய்கைகரைப்பட்டி என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அக்காலத்தில் இந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் பெரும்பஞ்சமாக இருந்ததாம். இந்த ஊர் மக்களின் தண்ணீர் தேவைக்காகவே சுமார் 12 ஏக்கர் அளவில் இக்குளத்தை வெட்டியதாகவும் அழகர் கோவில் மலையில் இருக்கும் மூலிகை தண்ணீர் இக்குளத்திற்கு வருவதாக கல்வெட்டில் கூறப்படுவதாக சொல்லப்படுகின்றது.

இந்தக் குளத்தில் ஆறு மாதங்கள் தண்ணி முழுவதுமாகவும் மற்ற ஆறு மாதங்கள் வற்றாத அளவிலும்தண்ணீர் இருக்குமாம். தற்பொழுது வரை இக்கிராமத்திற்கு இந்தக் குளத்தின் மூலமாகத்தான் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. இந்தக் குளம் வற்றினால் இவர்கள் தண்ணீருக்கு தள்ளாட வேண்டிய நிலை வருமாம்.

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பிப்ரவரி 4ம் தேதியன்று மின்தடை - உங்க பகுதி இருக்கா பாருங்க..

மேலும் சித்திரை திருவிழாவின் ஒரு நிகழ்வான கள்ளழகர் புறப்பாடு நிகழ்வின் ஒரு பகுதி இக்குளத்தில் நடைபெறும்.அழகர் மலையில் இருந்து புறப்பாடாகிய கள்ளழகர் இக்குளத்தில் எழுந்தருளி ஐந்து முறை குளத்தினை சுற்றி வரும் நிகழ்வு ஒரு நாள் திருவிழாவாக நடைபெறுமாம்.

First published:

Tags: Local News, Madurai