மதுரையில் ‘பெட் சண்டே மார்க்கெட்’ என்ற ஒரு சந்தை இயங்கி வருகிறது. விதவிதமான பறவைகள், நாய்கள், முயல்கள், புறாக்கள் என பலவிதமானசெல்லப்பிராணிகள் ஒரே இடத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மதுரை மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகிலும் அப்பகுதியை சுற்றியுள்ள வைகை ஆற்றுக்கரை சாலையிலும் இந்த சந்தையானது ஒவ்வொருஞாயிற்றுக்கிழமை அன்றுமட்டும் செயல்படுகிறது.
காலை 6 மணி முதல்10மணிக்குள் செயல்படும் இந்த சந்தையில்மதுரை சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஒட்டுமொத்த செல்லப்பிராணி ஆர்வலர்களும் கூடிவிடுகிறார்கள்.
நாய் முதல் பறவைகள் வரை வாங்கலாம் என்பதால் செல்லப்பிராணி வளர்ப்போரும், வளர்க்க நினைப்போரும், பெட் ஷாப் கடை வைத்து நடத்திவருபவர்கள், பெட் வளர்க்க முடியாத சூழ்நிலையில் விற்று விடலாம் என்று நினைப்பவர்கள், எல்லோரும் இந்த ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு வந்து விற்பனை செய்கிறார்கள்.
விதவிதமான பறவைகள்:
இச்சந்தையில் பறவைகள் அதிகமாக விற்கப்படுகின்றது. நம்மில் பலருக்கு பறவைகள் வாங்கி வளர்ப்பதில் மிகுந்த ஆர்வமும், ஆசையும் இருக்கும். இதற்கு ஏற்றார் போலலவ் பேர்ட்ஸ், ஆப்ரிக்கன் பேர்ட்ஸ், காக்டைல் பேர்ட்ஸ், பிஞ்சஸ் பறவைகள் என விதவிதமான பறவைகள் இங்கு விற்கப்படுகின்றன.
லவ் பேர்ட்ஸ் ஜோடியாக ரூ.1,500 க்கும், பின்சஸ், வைட் பிஞ்சஸ், ஆரஞ்சு பிஞ்சஸ், பெங்காலி பின்ச்சஸ் போன்ற ரக பறவைகளை2,000 ரூபாய்முதல் 4 ஆயிரத்திற்கும், ஆப்பிரிக்கன் பறவையில் ரிங் மற்றும் நாண்ரிங் இருக்கும் இவை அனைத்தும் 1800 முதல் 2000 வரை இங்கு விற்கப்பட்டு வருகின்றது. இது போக விரும்பி வாங்கக்கூடிய ரகமான காக்டைல் கொக்கோ டைலி போன்ற பறவைகள் 3,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றது.
புறா ரகங்கள்
மேலும் இங்கு புறாக்களில் நிறைய வகைகள் இருக்கின்றது கர்ணா புறா, தவுடால் முஸ்கி, கொண்டை, வெள்ளை மயில் புறா என விதவிதமான புறாக்கள் 500 ரூபாயில் இருந்து2,500 ரூபாய்வரை விற்கப்படுகின்றது.
முயல் ரகங்கள்
முயல்களிலும் வகை வகையான முயல்கள் உள்ளது நியூசிலாந்து முயல் ஜெயின் முயல் சிங்சிலா என விதவிதமான முயல்கள் 400-ல் இருந்து 1500 வரைக்கும் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் நாய்களும் விற்கப்படுகின்றது இதுபோக இங்கு லவ் பேர்ட்ஸ் முயல் புறா போன்ற செல்லப் பிராணிகளுக்கு ஏத்த மாதிரி கூண்டுகளும் இவர்களே செய்து இப்பகுதிக்கு வந்து விற்பனை செய்கின்றார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Animals, Birds, Local News, Madurai, New Market, Pet Animal