முகப்பு /மதுரை /

Madurai | காணும் பொங்கலுக்கு திருப்பரங்குன்றம் பூங்காவில் கூடிய மக்கள்

Madurai | காணும் பொங்கலுக்கு திருப்பரங்குன்றம் பூங்காவில் கூடிய மக்கள்

X
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பூங்காவில் மக்கள்

Madurai kaanum pongal | காணும் பொங்கலை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் பூங்காவில் பொதுமக்கள் திரண்டனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை தமிழ்நாடு மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் பகுதி முழுவதும் கொண்டாடப்படும். அதுமட்டுமல்லாமல் விவசாயிகள் நேரடியாக பயன் பெறும் ஒரு பண்டிகையாகவும் பொங்கல் உள்ளது.

தை மாதம் 1-ம் தேதி தொடங்கும் பொங்கல் பண்டிகையானது 3தேதி வரை நடைபெறும். போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்கள் தமிழ்நாடு முழுவதும் களைகட்டும். தமிழர்களின் பாரம்பரியத்தையும் உணர்ச்சியையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு கொண்டாடும் விழாவாக உள்ளது.

சூரியனை வழிபட்டு மாடுகளுக்கு மரியாதை செலுத்தி, பல பாரம்பரிய விளையாட்டுகளை நடத்திஆட்டம் பாட்டத்துடன் இந்த பொங்கல் விழாவானது நடைபெறும். குறிப்பாக கிராம பகுதிகளில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.

பூங்காவில் விளையாடும் சிறுவர்கள்

காணும் பொங்கலைப் பொறுத்தவரை நகர் பகுதிகளிலும் களைகட்டிக் காணப்படும். காணும் பொங்கலுக்கு உறவினர்கள் நண்பர்கள் சூழ சுற்றுலாத் தளங்களுக்குச் சென்று தங்களது பொழுதைக் கழித்து மிகழ்வர்.

அதாவது நம்மளோட உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா தளங்கள் போன்ற இடங்களுக்கு சென்று மகிழ்வது தான் காணும் பொங்கல்.

காணும் பொங்கல் என்றால் உற்றார் உறவினரை காணுதல் என்று அர்த்தம். அந்த வகையில் எப்பொழுதும் வெறிச்சோடியே இருக்கும் மதுரை திருப்பரங்குன்றம் பூங்கா இன்று குழந்தைகளின் சிரிப்பாலும் உறவினர் நண்பர்களின் பேச்சுகளினாலும் நிறைந்துள்ளது.

பல தலைமுறைகளாக பால் விற்பனை- மதுரையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடி நன்றி செலுத்தும் இஸ்லாமிய குடும்பம்

இதுதான் திருப்பரங்குன்றம் பூங்காவாஎன்று வியக்கும் அளவிற்கு பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai