முகப்பு /மதுரை /

திறக்கப்படுமா ஓபுலா படித்துறை பாலம்? மதுரை மக்கள் ஏக்கம்!

திறக்கப்படுமா ஓபுலா படித்துறை பாலம்? மதுரை மக்கள் ஏக்கம்!

X
ஒபுலா

ஒபுலா படித்துறை மேம்பாலம் திறக்க பொதுமக்கள் கோரிக்கை

Madurai Obula bridge | மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒபுலா படித்துறை மேம்பாலம் கட்டும் பணிகள் முடிந்து இன்னும் போக்குவரத்திற்கு திறக்கப்படாமல் உள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் கட்டுமான பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் இருக்கும் ஓபுலா படித்துறை தரைப்பாலத்தை திறந்து வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையின் வடக்கு பகுதியான மதிச்சியம், ஆழ்வார்புரம் போன்ற பகுதிகளையும் தெற்கு பகுதியான நெல்பேட்டை, இஸ்மாயில் புரம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல ஏதுவாக இருக்கக்கூடிய பாலம் தான், ஓபுளா படித்துறை தரைப்பாலம்.

மதுரையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையில் இந்த தரைப்பாலம் செயல்பட்டு வந்தது. ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலோ இந்தப் பாலம் தண்ணீரில் மூழ்கி பாலம் பழுதடைந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையின் பல்வேறு பாலங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் ரூபாய் 23 கோடி மதிப்பீட்டில் தரைபாலமான இந்த பாலம் இடிக்கப்பட்டு மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது விறுவிறுப்பாக நடந்த இந்த பணி முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் சித்திரைத் திருவிழாவிற்குள் பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால் சித்திரைத் திருவிழா முடிந்த பிறகும் இந்தப் பாலம் திறக்கப்படாமல் பாலத்தின் இரு புறங்களிலும் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. மக்களுக்கு வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கும் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு பகுதிக்கும் போக்குவரத்து இடையூறு இன்றி ஏதுவாக செல்ல இந்தப் பாலத்தில் உள்ள தடுப்புகளை பொதுமக்களே அகற்றி வாகனத்தை ஓட்டிச் சென்று வருகின்றார்கள்.

பாலம் முழுவதும் கட்டி இன்னும் போக்குவரத்திற்கு திறக்கப்படாமல் இருப்பது சிரமமாக இருக்கின்றது என்றும் விரைவில் இப்பாலத்தை திறக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Madurai