முகப்பு /மதுரை /

விட்டாச்சு கோடை விடுமுறை.. மதுரை ராஜாஜி பூங்காவுக்கு படையெடுக்கும் மக்கள்!

விட்டாச்சு கோடை விடுமுறை.. மதுரை ராஜாஜி பூங்காவுக்கு படையெடுக்கும் மக்கள்!

X
மதுரை

மதுரை அரசு ராஜாஜி பூங்காவில் அலைமோதும் கூட்டம்

Madurai rajaji park | தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பொழுதை கழிக்க பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

  • Last Updated :
  • Madurai, India

கோடை விடுமுறையை முன்னிட்டு மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ராஜாஜி பூங்காவில் குழந்தைகளுடன் கொண்டாடும் வகையில் மதுரை மக்கள் படையெடுக்கின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விட்டதை முன்னிட்டு மக்கள் அனைவரும் கோடை காலத்தை கொண்டாடும் வகையில் குடும்பத்துடன் சேர்ந்து குழந்தைகளுக்கு பிடித்தமான இடமான பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று தங்கள் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றார்கள்.

அந்த வகையில் மதுரை மக்கள் அனைவருக்கும் பிடித்துப் போன இடம் தான் காந்தி மியூசியம் அருகில் இருக்கக்கூடிய மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மதுரை மாநகராட்சி ராஜாஜி பூங்கா. ஒரு காலத்தில் 90 கிட்ஸ் இன் ஃபேவரட் ஸ்பாட் ஆக இருந்த இந்த பூங்கா சமீப காலமாக கூட்டமே இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த பார்க் முழுவதும் குழந்தைகள் பெரியவர்கள் என கூட்டம் அலைமோதுகின்றது.

பார்க் முழுவதும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டு குழந்தைகள் மிகவும் விரும்பி விளையாடக்கூடிய சர்க்கஸ், ஊஞ்சல், வாட்டர் போட்டிங், ஜம்பிங் பவுன்ஸ்,ரோப் கார் போன்றவையும், பெரியவர்கள் வரைக்கும் விளையாடக்கூடிய கொலம்பஸ், டோரா டோரா என பல வகையான விளையாட்டுத் தளங்கள் இருப்பதினால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் குதூகலமாக கோடை விடுமுறையை என்ஜாய் பண்ணும் வகையில் விளையாண்டு கொண்டிருக்கின்றேன்.

இது போக குழந்தைகள் விரும்பி உண்ணும் காலிபிளவர், மும்பை அப்பளம், ஐஸ்கிரீம், ஜிகர்தண்டா, ஃபிரஷ் ஜூஸ் என பல வகையான ஸ்னாக்ஸ் ஐட்டம் விற்பனை செய்து வருகின்றார்கள்.

இதையும் படிங்க | மதுரை சித்திரை திருவிழா... உணவு பாதுகாப்பு துறை விதித்த கட்டுப்பாடுகள் - முழு விபரம்!

ஒரு காலத்தில் 90 கிட்ஸ் இன் ஃபேவரிட் ஸ்பாட் ஆக இருந்த இந்த பார்க் தான் தற்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கின்றது. நீங்களும் கோடை விடுமுறையை கொண்டாட வேண்டும் என்றால் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து இந்த பார்க்கிற்கு சென்று வாருங்கள். காந்தி மியூசியம் அருகில் இருக்கக்கூடிய இந்த பார்க்கிற்கு நுழைவு கட்டணமாக இருவது ரூபாய் வசூலிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Madurai, Park