முகப்பு /மதுரை /

"மதுரையில் உலக சாதனை" 10 கிலோ மீட்டர் தூரம் சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்!

"மதுரையில் உலக சாதனை" 10 கிலோ மீட்டர் தூரம் சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்!

X
மாணவர்கள்

மாணவர்கள் சிலம்ப பயணம்

Madurai world record | மதுரை பரவை பகுதியில் இருநூறு மாணவர்கள் இணைந்து உலக சாதனை சிலம்பம் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் பரவையில் 2023 ஆம் ஆண்டிற்கான லண்டன் ஹார்வேர்டு வேல்டு ரெக்கார்ட் (Harvard World Records) சாதனை புத்தகத்தில், உலக சாதனை சிலம்ப நடை பயணம், முத்து நாயகி சிலம்ப பள்ளி மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்துடன் இணைந்து தமிழர் பாரம்பரிய சிலம்ப கலை விழிப்புணர்வு நடந்தது.

இதில் 200 மாணவர்கள் பரவை முதல் பொதும்பு கிராமம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றியபடி நடை பயணம் சென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சேர்மன் வழக்கறிஞர் மனோகரன் தலைமை தாங்கினார். கிராம நல கமிட்டி நாகமலை, போலீஸ் துணை சூப்ரெண்டு ஜஸ்டின் பிரபாகரன், முன்னாள் சேர்மன் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையும் படிங்க | ஓடும் ரயிலில் பயணிகளிடம் செல்போன் பறிப்பு...மதுரையில் பரபரப்பு சம்பவம்

இந்த சாதனை நடைப் பயணம் பரவை பாரதி மைதானம் அருகே தொடங்கி சிலம்பம் சுற்றியபடி கருப்பணசாமி கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக வளவன் நகர், கோவில் பாப்பாகுடி பிரிவு, அதலை, மதுரா சிட்டி வழியாக பொதும்பு சங்கையா கோயில் வரை சென்று மீண்டும் பரவைக்கு வந்தடைந்தது.

இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி வடமலை மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதன் ஏற்பாடுகளை முத்துநாயகி சிலம்ப பள்ளி ஆசிரியர்கள் இளங்கோவன், மீனாட்சி சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Madurai, World record