ஹோம் /மதுரை /

மதுரையின் ஊர்க்காவல் தெய்வம்.. விரகனூர் பரந்தாங்கி அய்யனார் கோயிலின் சிறப்புகள்..

மதுரையின் ஊர்க்காவல் தெய்வம்.. விரகனூர் பரந்தாங்கி அய்யனார் கோயிலின் சிறப்புகள்..

விரகனூர்

விரகனூர் பரந்தாங்கி அய்யனார் கோயிலின் சிறப்புகள்..

Madurai Virahanur Paranthangi Ayyanar Temple | மதுரை- திருப்புவனம் சாலையில் அமைந்துள்ள பரந்தாங்கி அய்யனார் கோயிலின் சிறப்புகள் மற்றும் வரலாறு.. மதுரையை சுற்றி உள்ள ஐந்து கிராமத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இந்த பரந்தாங்கி அய்யனார் கோயில் அவர்களது குல தெய்வ கோயிலாக விளங்குகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

தூங்கா நகரம், பாண்டிய நாடு என பல சிறப்பு பெயர்கள் கொண்ட மதுரையில் அதன் ஊர் காவல் தெய்வங்களுக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கிறது. அந்த வகையில் மதுரையை சுற்றி பல ஊர் காவல் தெய்வ கோயில்கள் இருப்பது நாம் அனைவருமே அறிந்த ஒன்று தான்..

அந்த வகையில மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் செல்லக் கூடிய சாலையில் விரகனூர் ரிங் ரோடு பகுதியில் அமைந்துள்ள கோயில் தான் இந்த பரந்தாங்கி அய்யனார் கோயில்..

மதுரையை சுற்றி உள்ள ஐந்து கிராமத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இந்த பரந்தாங்கி அய்யனார் கோயில் அவர்களது குல தெய்வ கோயிலாக விளங்குகிறது.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

சுமார் 500 முதல் 700 வருடங்கள் பழமையான கோயிலாக இக்கோயில் விளங்குகிறது, இந்த கோயிலை பற்றின மேலும் பல தகவல்களை ஆரிய நாம் இக்கோயிலின் பூசாரியை தொடர்பு கொண்டோம், அப்போது அவர் கூறுகையில் இக்கோயில் மதுரை சுத்து வட்டாரத்தில் உள்ள மணலூர், பிறக்குடி, புளியங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு குல தெய்வ கோயிலாக உள்ளதாகவும் மேலும் இக்கோயில் கட்டப்பட்டு தற்போது வரை 500 ஆண்டுகள் கடந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

மேலும் இந்த பரந்தாங்கி ஐயனார் கோயில் மதுரையின் தென் கிழக்கு பகுதிகளுக்கு காவல் தெய்வமாக விளங்குவது இதன் தனிச்சிறப்பு..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Madurai