முகப்பு /மதுரை /

மதுரை திருப்பரங்குன்றம் பால் சுனை கொண்ட சிவபெருமானின் சிறப்புகள் தெரியுமா?

மதுரை திருப்பரங்குன்றம் பால் சுனை கொண்ட சிவபெருமானின் சிறப்புகள் தெரியுமா?

X
பால்

பால் சுனை கொண்ட சிவபெருமான் கோவில்

Madurai paal sunai kanda Sivan| மதுரை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள மிகவும் சக்தி வாய்ந்த கோவில்தான் பால் சுனை கண்ட சிவபெருமான் திருக்கோவில்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவில் திருப்பரங்குன்றம் பூங்காசெல்லும் சாலையில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் கோவிலின் நுழைவாயிலிலே மாலையினால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமான் காட்சியளிக்கின்றார்.

இக்கோவில் முதலில் ஒத்தையடி பாதையாக இருந்ததாகவும் 28 ஆண்டுகளுக்கு முன் சிட்டிசாமியார் அத்வானந்தா சுவாமிகள் தான் இக்கோவிலை கட்டியதாகவும் கூறப்படுகின்றது. முதலில் ஒரு பெரிய பாறை இப்பகுதியில் இருந்ததாகவும் அதன் அருகில் பூமியோடு பூமியாய் தரைக்குள் சிவபெருமான் இருந்ததாகவும் பின்பு அவரை மேலே எடுத்து எழுப்பியதாகவும் கூறுகின்றார்கள்.

மரங்கள் நிறைந்த இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ள இக்கோவிலில் இவர் அக்னி சக்தி வாய்ந்தவராக இருக்கின்றாராம். அதாவது சில சமயங்களில் இவர் பக்கத்தில் நின்றால் வெப்ப காத்து அனலாக இருக்குமாம். இதுபோக முக்கிய சனி பிரதோஷங்களில் இவருக்கு 108 மூலிகைகள் கொண்டு அபிஷேகம் செய்யப்படுமாம். இந்த மூலிகைகளை உலர வைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் நோய் நொடிகள் நீங்குமாம். அன்ன அபிஷேகம் பௌர்ணமி என்ற விசேஷ பௌர்ணமி அன்று இக்கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

இக்கோவிலை சுற்றி 14 தீர்த்த கிணறுகள் இருந்ததாகவும் அதில் ஒரு கிணற்றில் தண்ணீர் சுவை மட்டும் பால் சுவை போன்று இருந்ததால் தான் இக்கோவிலுக்கு பால்சுனை கண்ட சிவபெருமான் என்ற பெயர் வந்ததாகவும் பின்பு காலப்போக்கில் இத்தீர்த்தத்தின் சுவை மாறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ரீல்ஸ் மோகத்தில் பைக்கில் கெத்தாக சாகசம்.. கொத்தாக தூக்கிய மதுரை போலீசார்..!

கோவிலின் உட்புறத்தில் இருக்கும் மேல்பகுதிக்குச் சென்றால் சிவபெருமானின் ஆதி என்று சொல்லக்கூடிய ஆதி சிவனும் பால திரிபுரி சுந்தரி என்ற சக்தி வாய்ந்த அம்பாளும் அருள் பாலிக்கின்றார்கள்.

First published:

Tags: Local News, Madurai