முகப்பு /மதுரை /

மதுரை மக்களுக்கு குட் நியூஸ்.. புத்தம் புதிய ஒபுலா படித்துறை மேம்பாலம் விரைவில் திறப்பு..

மதுரை மக்களுக்கு குட் நியூஸ்.. புத்தம் புதிய ஒபுலா படித்துறை மேம்பாலம் விரைவில் திறப்பு..

X
ஒபுலா

ஒபுலா படித்துறை மேம்பாலம்

Madurai News | மதுரை ஒபுலா படித்துறை பாலத்தை அகற்றி 20 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையின் வடக்கரை மற்றும் தென்கரை பகுதியை இணைக்கும் பகுதியாக ஏவி மேம்பாலம், யானைகல் மேம்பாலம் மற்றும் தரை பாலங்கள் இருந்து வந்தது. கோரிப்பாளையத்தில் இருந்து சிம்மக்கலுக்குப் போக ஏதுவாக ஏவி பாலமும் யானைக்கால் மேம்பாலமும், மதிச்சியம் செல்லூர் பகுதிகளிலிருந்து ஆழ்வார்புரம் நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்குச் செல்ல தரைப்பாலம் ஏதுவாக இருந்தது.

இதனிடையே, மழைக்காலத்தில் இந்த தரை பாலம் நீரில் மூழ்கி கடக்க முடியாத நிலையினால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தரைப் பாலங்கள் இடிக்கப்பட்டு மேம்பாலங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் மதுரை ஒபுலா படித்துறை பாலத்தை அகற்றி ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தது. மந்தமான நிலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்த நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள் நிகழ்வு இப்பகுதியில் நடைபெறும் என்பதால் அதற்குள் மேம்பாலம் கட்டும் பணியை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், ஒபுலா படித்துறை மேம்பால 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும் சிறு சிறு வேலைகளான பிளாட்பாரம் போடும் பணியும், பாலத்தையும் சாலையையும் இணைக்கும் பணியையும், சாலையை சீரமைத்தல் மற்றும் சிறு சிறு இடங்களில் பெயிண்ட் அடித்தல் போன்ற வேலைகள் மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. 95% நிறைவடைந்து போக்குவரத்திற்கு தயாராகி வரும் ஒபுலா படித்துறை பாலம் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

First published:

Tags: Local News, Madurai