முகப்பு /செய்தி /மதுரை / 100 நாள் வேலை பொறுப்பாளர் எடுத்த விபரீத முடிவு... ஊராட்சி செயலாளர் நீக்கம்...!

100 நாள் வேலை பொறுப்பாளர் எடுத்த விபரீத முடிவு... ஊராட்சி செயலாளர் நீக்கம்...!

உயிரிழந்த நாகலட்சுமி

உயிரிழந்த நாகலட்சுமி

புகாருக்கு உள்ளான ஊராட்சி செயலாளர் முத்துவை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பணித்தள பொறுப்பாளர், ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், ஊராட்சி செயலாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி நூறு நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். புதன்கிழமையன்று மதுரை நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்த அவர், சிவரக்கோட்டை அருகே பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு மையிட்டான்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார், ஊராட்சி செயலாளர் முத்து ஆகியோரே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இதன்பேரில் காவல்துறையினர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில், மூவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் நாகலட்சுமியின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக்கூறி ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

top videos

    இந்த நிலையில், புகாருக்கு உள்ளான ஊராட்சி செயலாளர் முத்துவை பணியிடைநீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

    First published:

    Tags: Madurai