ஹோம் /மதுரை /

பல தலைமுறைகளாக பால் விற்பனை- மதுரையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடி நன்றி செலுத்தும் இஸ்லாமிய குடும்பம்

பல தலைமுறைகளாக பால் விற்பனை- மதுரையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடி நன்றி செலுத்தும் இஸ்லாமிய குடும்பம்

X
பொங்கலிடும்

பொங்கலிடும் குடும்பத்தினர்

Madurai Mattu Pongal | மதுரையில் இஸ்லாமியக் குடும்பத்தினர் பல வருடங்களாக மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மாட்டுப் பொங்கல் பண்டிகை என்பது மாடுகளுக்கு நன்றிகளை தெரிவிக்கும் விதமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. மாட்டுப் பொங்கல் பண்டிகையை பல இடங்களில் மதங்களை கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மதுரை மாவட்டம் ஆவின் நகர் பகுதியில் தலைமுறை தலைமுறையாக மாட்டுப்பண்ணை வைத்திருக்கும் துணை பேராசிரியர் அசார், தனது அப்பாவுடன் சேர்ந்து 40 மாடுகள், ஆடுகள், கோழிகளை வளர்த்து வருகின்றார்.

பொங்கலிடும் இஸ்லாமிய தம்பதி

இஸ்லாம் மதத்தைச் சார்ந்த அவர், ஒவ்வொரு ஆண்டும் தனது பண்ணையில் இருக்கும் மாடுகளுக்கு நன்றிகளை தெரிவிக்கும் விதமாக தனது குடும்பத்துடன் சேர்ந்து மாட்டுப்பொங்கலைக் கொண்டாடி வருகின்றார்.

மாட்டுப்பொங்கல் ஆன இன்று தனது 40 மாடுகளை குளிக்க வைத்து பழைய மூக்குநான் கயிற்றை அவிழ்த்து, வண்ண வண்ண புதிய கயிறுகளை கட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி மாடுகளை தயார் படுத்தினார்.

பின்பு மாட்டுத் தொழுவத்தைச் சுத்தம் செய்து குடும்பத்துடன் சேர்ந்து பச்சரிசியில் பொங்கல் விட்டு மாடுகளுக்கு வழங்கினார். பாரம்பரியமான இத்திருநாளை மதங்களைக் கடந்தும் கொண்டாடி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai