மதுரை மாநகரம் ஆன்மீக சிறப்புடன், புராதன பெருமைக்குரிய வரலாற்று நகரமாகும். 148 கி.மீ பரப்பளவிற்க்கு விரிந்துள்ள இந்நகரத்தில் 22 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நகர்ப்புறம் மட்டுமல்லாமல் திருமங்கலம், மேலூர், பெருங்குடி ஆகிய புறநகர் பகுதிகளிலும் நாளுக்கு நாள் மக்கள் குடியிருப்புகள் விரிவடைந்து வருகின்றன.
இதன் காரணமாக மதுரை நகர் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் ஏராளமான சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் காளவாசல், சொக்கிக்குளம் ஆகிய பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்டுள்ளன. தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை புதிய மேம்பாலம் கட்டுவதற்கான திட்டப்பணிகள் துவங்கிவிட்டன. வைகை நதியின் இரு ஆற்றங்கரைகளிலும் புதிதாக 2வழி சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்தும் நெரிசல் குறைந்தபாடில்லை.
எனவே இந்த நெருக்கடியை தீர்க்க, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், மக்களின் போக்குவரத்தை எளிமைப்படுத்தவும் சென்னையை போலவே மதுரையிலும் மெட்ரோ ரயில் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனவே இந்த பணிகளானது முடிவடைந்து சட்டப்பேரவையில் இத்ததிட்டம் விரைவில் நடைமுறைக்கு வருவதை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதிபடுத்தியுள்ளார்.
இரு வழித்தடங்களில் மெட்ரோ அமைக்கப்படும். மதுரையில் மெட்ரோ சேவை முதற்கட்டமாக இரு வழித்தடங்களில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாட்டுத்தாவணியில் தொடங்கும் வழித்தடம் கே.கே.நகர், அண்ணா நகர், தெப்பக்குளம், முனிச்சாலை, கீழவாசல், கீழவெளி வீதி, தெற்குவாசல், பெரியார் நிலையம், அரசரடி, காளவாசல், பாத்திமா கல்லூரி, ஆணையர், தபால்தந்தி நகர், பார்க் டவுன் வரை செல்லும்.
மற்றொரு வழித்தடம் கோரிப்பாளையத்தில் தொடங்கி செல்லூர் ரயில் நிலையம், மதுரா கல்லூரி, பசுமலை, திருப்பரங்குன்றம், திருநகர், தோப்பூர் (ஏய்ம்ஸ்), திருமங்கலம் வரை செல்லும்.
இத்திட்டம் தொடர்பான பணிகள் வேகமெடுத்திருப்பதால் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.