முகப்பு /மதுரை /

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்.. இறுதிகட்ட மண் பரிசோதனை பணிகள் தீவிரம்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்.. இறுதிகட்ட மண் பரிசோதனை பணிகள் தீவிரம்!

X
மாதிரி

மாதிரி படம்

Madurai Metro Rail Project : மதுரையில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் இத்திட்டத்திற்கான இறுதிக்கட்ட மண் பரிசோதனை மதுரை வைகை ஆற்று பகுதியான ஆழ்வார்புரம் பகுதியில் நடைபெற்றது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் தொடக்க பணிகளில் ஒன்றான மண் பரிசோதனை ஆங்காங்கே தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய மதுரை மாநகரில் 8,500 கோடி மதிப்பீட்டில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை, அதாவது திருமங்கலத்தில் இருந்து தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், மதுரா காலேஜ், சிம்மக்கல், கோரிப்பாளையம், கே.கே.நகர், மாட்டுத்தாவணி, ஹைகோர்ட் வழியாக ஒத்தக்கடை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இறுதிகட்ட மண் பரிசோதனை பணிகள்

இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டமாக திருமங்கலம், திருப்பரங்குன்றம், ஒத்தக்கடை, மாட்டுத்தாவணி போன்ற பல்வேறு பகுதிகளில் மண் பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட மண் பரிசோதனையானது, மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழா நடைபெற்றதால் இப்பகுதியில் மண் பரிசோதனை செய்ய காலதாமதம் ஏற்பட்டதாக கூறுகின்றார்கள். ஆகையால், தற்போது இறுதி கட்ட மண் பரிசோதனை நடைபெறுகிறது. அதன்படி, இயந்திரம் மூலம் 30 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு, ஆங்காங்கே மண் எடுக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு இடத்திலும் மண்ணின் தன்மை மாறுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பின்பு பரிசோதனை செய்யப்பட்ட மண் அனைத்தையும் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கே ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    First published:

    Tags: Local News, Madurai