முகப்பு /செய்தி /மதுரை / மதுவுக்கு அடிமையான மகன்... கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளி கொன்ற தந்தை... மதுரையில் பயங்கரம்..!

மதுவுக்கு அடிமையான மகன்... கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளி கொன்ற தந்தை... மதுரையில் பயங்கரம்..!

மதுரை கொலை

மதுரை கொலை

Madurai murder | பெருமாள் மற்றும் பொன்னையனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Melur, India

மேலூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனின் கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடியை சேர்ந்தவர்  பெருமாள் (55).  இவர் மகன் ராஜபிரபு (26) மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மது குடித்துவிட்டு பல்வேறு பிரச்னைகளில் ஈடுபட்டு பெற்றோருக்கு தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் பெருமாள், ராஜபிரபு மற்றும் உறவினர் பொன்னையன் ஆகியோர் பெருமாளுக்கு சொந்தமான வயல் பகுதியில் உள்ள கிணறு அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, பெருமாள் தனது மகனான ராஜபிரபுவை உறவினர் பொன்னையனுடன் சேர்ந்து கை, மற்றும் காலை துணியால் கட்டி கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்துள்ளார்.

top videos

    இதுகுறித்து தகவலறிந்த மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ராஜபிரபுவின் உடலை தீயணைப்புத் துறையினர்  1 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக தேடி மீட்டனர். ராஜபிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பெருமாள் மற்றும் பொன்னையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    First published: