ஹோம் /மதுரை /

மதுரை மீனாட்சியம்மன் கோவில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது!

மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சியம்மன்  கோவிலில் இன்று மாலை நவாரத்தி விழா கோலாகமாக துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் சிறுவர்கள், பெண்கள், சிறுமியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று மாலை நவாரத்தி விழா கோலாகமாக துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் சிறுவர்கள், பெண்கள், சிறுமியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் சேர்ந்து 9 நாட்கள் நடக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா 9 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். கோவில் வளாகத்தில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்படுகிறது. விழாவை முன்னிட்டு காலை திருமுறை இசை நிகழ்ச்சியும், பரதநாட்டியமும் நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 5.30 மணிக்கும், 6.30 மணிக்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நவராத்திரியின் மகிமை என்ற ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. 8.30 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கி றது.

நாளை (27-ந்தேதி) அம்மனுக்கு கோலாட்ட அலங்காரமும், 28-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந்தேதி ஊஞ்சல் அலங்காரமும், அக்டோபர் 1-ந்தேதி அர்த்த நாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந்தேதி தண்ணீர்பந்தல் வைத்தல் அலங்காரமும்,3-ந்தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந்தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும், 5-ந்தேதி விஜயதசமி சடையலம்புதல் அலங்காரமும் செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்க: மதுரை தானிய குடில் இயற்கை உணவகம்.. சுடச்சுட 3 வேளையும் உடலுக்கு நன்மை தரும் உணவுகள்

விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகளும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை துணை ஆணையர் அரு ணாச்சலம், உதவி ஆணையர் யக்ஞநாராயணன் தக்கார் கருமுத்து கண்ணன் ஆகி யோர் செய்துள்ளனர்.

இதேபோல் இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது. மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மதுரையில் வீடுகளிலும் பெண்கள் கொலு அமைத்து சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Hindu Temple, Local News, Madurai