ஹோம் /மதுரை /

மதுரை மீனாட்சியம்மன் கோயில், முருகன் கோயில் நாளை மறுநாள் மூடல்! - என்ன காரணம்?

மதுரை மீனாட்சியம்மன் கோயில், முருகன் கோயில் நாளை மறுநாள் மூடல்! - என்ன காரணம்?

மதுரை

மதுரை

Madurai News | மதியம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம்போல் பகல் 12 மணிக்கு வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் சந்திர கிரணத்தையொட்டி நாளை மறுநாள் (8ம் தேதி) நடை சாத்தப்படுகிறது என்று கோயில் நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி-சொக்கநாதர் கோயிலில் சந்திரகிரகணத்தையொட்டி நாளை மறுநாள் (8ம் தேதி) (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 7.30 வரை நடை அடைக்கப்படும்.

சந்திரகிரகணம் மாலை 2.39க்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடிவடைவதால் நடை சாற்றப்படுகிறது.

பின் இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அதே நேரத்தில் இந்த கோயிலில் மதியம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம்போல் பகல் 12 மணிக்கு வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டுக்கு வேலைக்கு போறீங்களா? - மதுரை கலெக்டர் தந்த உதவி எண்களை தெரிந்துகொள்ளுங்கள்!

இதேபோல், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் துணை ஆணையரும், நிர்வாக அதிகாரியுமான சுரேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாளை மறுநாள் (8ம் தேதி) (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணி முதல் மாலை 6.32 மணி முடிய சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் அன்றைய தினம் கோயில் நடை காலை 9 மணியளவில் சாத்தப்பட்டு சந்திரகிரகணம் முடிவுற்ற பின் இரவு 7.31 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் நாளை (7ம் தேதி) பவுர்ணமி என்பதால் மாலை 4.54 மணிக்கு மேல் கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai