முகப்பு /மதுரை /

மீனாட்சி - சுந்தரேஸ்வரருக்கு டும்டும்.. மதுரைக்கே விருந்து வைத்த பக்தர்கள்!

மீனாட்சி - சுந்தரேஸ்வரருக்கு டும்டும்.. மதுரைக்கே விருந்து வைத்த பக்தர்கள்!

X
மதுரை

மதுரை விருந்து

Madurai Food feast | மதுரை சேதுபதி பள்ளியில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்ற நிலையில் மதுரை சேதுபதி பள்ளியில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் விருந்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இத்திருவிழாவின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று தான் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி.

அந்த வகையில் 8 35 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்கமேலகாலங்கள் அடித்து மாபெரும் திருக்கல்யாணம் வைபவம் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் திரண்டனர்.

இந்த நிலையில் மீனாட்சி அம்மன்திருக்கல்யாணத்தைக்காண வந்த மதுரை மற்றும்அதனைசுற்றியுள்ளபகுதிகளைச்சேர்ந்த பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. காலை 6மணியிலிருந்து4 மணி வரை சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் அன்னதானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இது குறித்து பேசிய பழமுதிர்சோலை திருவருள் பக்த சபை உறுப்பினர் கார்த்திகேயன், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் விருந்து சுமார் 23 வருடங்களாக நடந்து வருகின்றது இதற்கு முன்பு அதாவது உன் 10 வருடங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது சில காரணத்தினால் 13 வருடங்களாக மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகின்றது. முதன் முதலில் இந்த விருந்திற்கு 3000 பேர் வந்திருந்தவர்கள் தற்பொழுது ஒரு லட்சம் பேர் மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விருந்திற்காக வருகின்றார்கள்.

இதையும் படிங்க | கள்ளழகர் வேடம் அணியும் பக்தர்கள் உருமா கட்டுவது ஏன் தெரியுமா?

தன்னுடைய வீட்டில் கல்யாணம் நடந்தால் எப்படி ஒரு விருந்து வைத்து வந்து சாப்பிடுவார்களோ அதே போல் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கும் பக்தர்களால் தான் விருந்து நடைபெற்று தன் வீட்டில் நடக்கும்கல்யாணத்திற்குசாப்பிட வருவது போல் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

டிரஸ்ட் மற்றும் பக்தர்கள் மூலமாகவே நடைபெற்று வரும் இந்த விருந்தில் காலையில் சப்பாத்தி கிச்சடி கேசரி வடை போன்ற உணவுகளும் மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், கேசரி,  உளுந்தவடை, போண்டா, பஜ்ஜி, வெஜிடபிள் புலாவ் என ஒன்பது வகையான சாப்பாடுகளைக் கொண்டு இந்த விருந்தில் சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Food18, Local News, Madurai, Madurai Chithirai Festival