முகப்பு /செய்தி /மதுரை / மீனாட்சி கோவிலில் யானைக்கு நீச்சல் குளம்: தண்ணீரை பார்த்து துள்ளி குதித்து விளையாடிய ’பார்வதி' யானை!

மீனாட்சி கோவிலில் யானைக்கு நீச்சல் குளம்: தண்ணீரை பார்த்து துள்ளி குதித்து விளையாடிய ’பார்வதி' யானை!

நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த பார்வதி யானை

நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த பார்வதி யானை

Madurai Meenakshi Temple Elephant | யானை தினமும் உற்சாக குளியல் போடுவதற்காக 23 லட்சம் ரூபாய் செலவில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள யானைக்கு கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 25 வயதுமிக்க பார்வதி யானை சேவையாற்றி வருகிறது. இந்த யானை தினமும் உற்சாக குளியல் போடுவதற்காக 23 லட்சம் ரூபாய் செலவில் குளியல் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதிகரித்து வரும் கோடை வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்கும் விதமாக, பார்வதி யானையின் உடல் உஷ்ணத்தை குறைக்கும் வகையில், குளியல் தொட்டி கட்டும் பணியை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, கட்டட பணிகள் முடிவடைந்ததை அடுத்து நீச்சல் குளத்தை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். தொடர்ந்து யானைக்கு செவ்வாழை பழம் உள்ளிட்டவற்றை வழங்கினார். அதன்பின் அமைச்சருக்கு ஆசி வழங்கிவிட்டு யானை நீச்சல் குளத்தில் இறங்கி ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தது.

இதையும் படிங்க:இப்படி பேசி பேசித்தான் அண்ணாமலை பெரிய ஆளாகிறார்” - ஈபிஎஸ் காட்டமான விமர்சனம்!

top videos

    அதன்பின் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக நான்கு சித்திரை வீதிகளிலும் கட்டப்பட்டுள்ள நிழற்குடைகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பார்வதி யானைக்கு ஏற்பட்ட தொற்று பாதிப்பு முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், கண் பாதிப்பு மேலும் மோசமடையாமல் இருக்க சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

    First published:

    Tags: Elephant, Madurai