Home /madurai /

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் நாளை முதல் 2-ம் கட்ட கலந்தாய்வு

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் நாளை முதல் 2-ம் கட்ட கலந்தாய்வு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் நாளை முதல் பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

    அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1-ம் கட்ட மாணவ, மாணவிகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 5-ந் தேதி  தொடங்கியது. இதையடுத்து, மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் மொழிப்பாடம் தவிர முதன்மை பாடங்களில் 400 மதிப்பெண்ணுக்கு 330 வரை எடுத்த மாணவிகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 12-ந் தேதி வரை நடந்தது. அதனை தொடர்ந்து, காலியாக உள்ள பாடப்பிரிவுக்கான இடங்களுக்கு நாளை முதல் 2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

    அதன்படி, நாளை முதல் கலந்தாய்வில் பி.காம்(2-வது ஷிப்டு) படிப்புக்கு 320-329 மதிப்பெண் எடுத்த எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி ஆகிய பிரிவுகளுக்கும், பி.பி.ஏ படிப்புக்கு 320-329 மதிப்பெண் எடுத்த எஸ்.சி அருந்ததியர், பொருளியல், வரலாறு மற்றும் புவியியல் பாடப்பிரிவுகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கு 250-329 மதிப்பெண் வரையிலும் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

    23-ந் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் தமிழ் மற்றும் ஆங்கில வழி, கணினி அறிவியல், பி.சி.ஏ தாவரவியல், மனையியல் ஆங்கில வழி பிரிவுகளுக்கு 260-329 மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடக்கிறது. மேற்கண்ட 2 நாட்களும் பிளஸ்-2 வில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் படித்து 330-க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். வருகிற 24-ந் தேதி தமிழ் இலக்கியம் பட்டப்படிப்புக்கு தமிழ் மொழிப்பாடத்தில் 87-88 மதிப்பெண் பெற்ற பி.சி பிரிவு மாணவிகளும், 65-74 மதிப்பெண் பெற்ற எஸ்.சி.அருந்ததியர் பிரிவு மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    ஆங்கில இலக்கிய பட்டப்படிப்புக்கு ஆங்கில மொழிப்பாடத்தில் முதல் ஷிப்டுக்கு 80-81 மதிப்பெண் பெற்ற பி.சி மாணவிகள், 65-74.78 மதிப்பெண் பெற்ற எஸ்.சி அருந்ததியர், எஸ்.டி பிரிவு மாணவிகள் கலந்து கொள்ளலாம். 2-வது ஷிப்டுக்கு 65-74.44 மதிப்பெண் பெற்ற அனைத்துப்பிரிவு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

    இந்த கலந்தாய்வு காலை 9.30 மணிக்கு தொடங்கும். குறிப்பிட்ட மதிப்பெண் பெற்ற மாணவிகள் மட்டும் தங்களது பிளஸ்-1, 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் எண் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், கல்விக்கட்டணம் ரூ.1,400-ரூ.2,100 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். கலந்தாய்வில் தேர்வு செய்யப்படும் மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே கல்விக்கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி