முகப்பு /மதுரை /

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரடியாக காண விருப்பமா?

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரடியாக காண விருப்பமா?

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

Madurai Meenakshi Amman's Thirukalyanam | மதுரை மீனாட்சியம்மன்கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாண நிகழ்விற்கான கட்டண அனுமதிசீட்டு ஆன்லைன் மற்றும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

  • Last Updated :
  • Madurai, India

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நிகழ்வை காண்பதற்காக மதுரை மற்றும் மதுரை சுற்றியுள்ள மக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழா வரும் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக செய்யப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் மே மாதம் 2 ஆம் தேதி அன்றுமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும் மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருக்கல்யாண உற்சவத்தை காண வரும் பக்தர்கள் வரும் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவிற்கு விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க 500 ரூபாய் கட்டண சீட்டில் 2500 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க : தொடர் விடுமுறை.. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் மக்களால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

200 ரூபாய் கட்டண சீட்டிலும் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்டண சீட்டை பக்தர்கள் www.maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு சித்திரை வீதி, பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள அலுவலகத்திலும் நேரடியாகவும் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    கட்டண தரிசனத்துக்கு முன்பதிவு செய்யக்கூடிய பக்தர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, லைசென்ஸ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவண நகல் மட்டும் செல்போன் எண், மெயில் ஐடி களை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Madurai