உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. மதுரை திருவிழாவை காண்பதற்கெனவே மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் என லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தருவார்கள்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 2ம் தேதி திருக்கல்யாண நிகழ்வு, மே 3ம் தேதி திருத்தேரோட்டம் நிகழ்வும் சிறப்பு வாய்ந்தவை. இந்த திருத்தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு சிம்மக்கல் பகுதியில் உள்ள தேர்முட்டி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 திருத்தேர்கள் அடைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டிகளை திறந்து, தற்போது திருத்தேரோட்டம் நிகழ்விற்காக சுத்தம் செய்து, பாலிஷ் அடிக்கும் பணியும், தேரின் 6 சக்கரங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியும், தேரை கட்டும் பணிகள்என்று பல்வேறு பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தேரை தூய்மை செய்யும் பணியாளர் கண்ணன் கூறுகையில், “15 வருடங்களாக நாங்கள் தான் இந்த தேரை தூய்மை செய்து பாலிஷ் அடிக்கும் பணிகளை செய்து வருகிறோம். குறிப்பாக மூலிகை கலந்த வார்னிஷை தான் பயன்படுத்தி வருகிறோம். மனிதர்களுக்கும், மரத்திற்கும் சிறிதளவு கூட தீமையை தராத வண்ணம் ஸ்பெஷல் வார்னிஷை பயன்படுத்தி வருகிறோம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
முதலில் தேரில் உள்ள தூசிகளை பிரஷ் கொண்டு தூய்மை செய்துவிட்டு, பின்பு மூலிகை கலந்த வார்னிஷை பயன்படுத்தி தேரில் உள்ள சிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தெளிவான அளவில் பாலிஷ் செய்து வருகிறோம். பின்பு, சக்கரங்களில் உள்ள கிரீஸ்களை சுத்தம் செய்து காப்பர் போன்ற பெயிண்டுகளை அடித்து தேரில் உள்ள குமிழ்களுக்கு கோல்ட் பெயிண்டுகளும் அடித்து வருகிறோம். தற்போது 10 பேர் கொண்டு இந்த வேலையை செய்து வருகிறோம். இன்னும் 10 நாட்கள் வேலைகள் இருக்கும்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai