ஹோம் /Madurai /

Madurai | மீனாட்சி அம்மன் கோவிலில் 29-ம் தேதி ஆடி முளைகட்டு திருவிழா தொடக்கம்

Madurai | மீனாட்சி அம்மன் கோவிலில் 29-ம் தேதி ஆடி முளைகட்டு திருவிழா தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகட்டு திருவிழா வருகின்ற 29ம் தேதி தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடி முளைகட்டு திருவிழாவும் ஒன்று. அதன்படி நிகழ் ஆண்டுக்கான ஆடி முளைகட்டு திருவிழா வருகின்ற ஜூலை 29ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் நடந்தாலும் இத்திருவிழாவானது மீனாட்சி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும் திருவிழாவாகும். ஆடி முளைகட்டு திருவிழா ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலைவிழா, மார்கழி என்னை காப்பு உற்சவம் ஆகியவை மீனாட்சி அம்மனுக்கு மட்டுமே பிரத்யேகமாக நடைபெறும் திருவிழாவாகும்.

விவசாயம் செழிக்கும் வகையிலும், நாடு செழிக்கும் விதமாகவும் கொண்டாடப்படும் ஆடி முளைக்கட்டு திருவிழா வருகின்ற ஜூலை 29ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருவிழாவின் போது மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கிறார். 7ம் நாளன்று இரவு திருவீதி உலா முடிந்த பின்னர் உற்சவர் சன்னதியில் அம்மன் சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.

இதையொட்டி ஆடி முளை உற்சவம் நடைபெறும். ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 8 வரை 10 நாட்கள் மீனாட்சி அம்மன் கோவில் சார்பிலோ உபயதாரார் சார்பிலோ தங்கரத உலா, திருக்கல்யாண நிகழ்வுகளை பதிவு செய்ய இயலாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai