முகப்பு /மதுரை /

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா- விமர்சையாக நடைபெற்ற சட்டத்தேர் நிகழ்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா- விமர்சையாக நடைபெற்ற சட்டத்தேர் நிகழ்வு

X
சட்டத்தேர்

சட்டத்தேர் நிகழ்வு

Madurai | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத் திருவிழாவின் 9 வது நாளான இன்று சுவாமியும் அம்மனும் சட்டத்தேரில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழாவையொட்டி இன்று காலை சட்டத்தேர் நிகழ்வு நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்பத் திருவிழா ஜனவரி 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வருகின்ற பிப்ரவரி நான்காம் தேதி மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சியும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் சன்னதியில் இருந்து எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலிப்பார்கள்.

நாப்கின் தயாரிப்பில் அசத்தும் மதுரை மகளிர் குழு பெண்கள்..

அதன்படி திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை அம்மன், அம்மன் சன்னதியில் இருந்து சட்ட தேரில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்வை காண்பதற்கு எனவே பல்வேறு பக்தர்கள் இப்பகுதியில் திரண்டு அம்மனையும் சுவாமியையும் தரிசித்தனர்.

First published:

Tags: Local News, Madurai