Home /madurai /

Madurai | மதுரை மீனாட்சி கோயிலில் வேலை வாய்ப்பு அறிவிப்பு.!

Madurai | மதுரை மீனாட்சி கோயிலில் வேலை வாய்ப்பு அறிவிப்பு.!

மீனாட்சி கோவில்

மீனாட்சி கோவில்

Madurai | மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு பணிக்காக அவுட் சோர்ஸ் முறையில் முன்னாள் ராணுவ வீரர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தத்தை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தினந்தோறும் கோயிலை சுற்றி உள்ள ஐந்து கோபுரங்களில் பாதுகாப்பிற்காக 100 காவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்நிலையில் கோயிலில் ஐந்து கோபுர வாயில்களில் பொருட்கள் பாதுகாப்பு அறையில் உள்ள ஸ்கேனரில் பக்தர்களின் பொருட்களை ஸ்கேன் செய்யும் பணி மற்றும் உப கோயில்களில் இரவு காவல் பணிக்கு மற்றும் உப கோயில்களில் பணியாற்ற இந்து மதத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 75 பேரை பணியமர்த்த ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த புள்ளி படிவத்தை வரும் ஜூலை 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அறநிலையத்துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் வருகின்ற 14ம் தேதி வரை கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் இதற்கான படிவங்களை www.tenders.tn.gov.in மற்றும் www.tnhrce.gov.in‌ என்ற இணையதளம் வாயிலாக பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி