Home /madurai /

மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை மகாருத்ராபிஷேக உற்சவம்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை மகாருத்ராபிஷேக உற்சவம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு வரும் 12-ம் தேதி மகாருத்ராபிஷேக உற்சவம் நடைபெறும் என்று கோயில் நிர்வாக கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்(Meenakshi Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்று அழைக்கின்றனர்.

இக்கோயிலே, தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4-ஆவது தலமாகத் திருவாலவாய் உள்ளது.

இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகாருத்ராபிஷேக உற்சவம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுக்ஞை, புண்யாஹவாசனம், விக்னேசுவரபூஜை, பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, 108 கலச பூஜை, மஹன்யாசம், ருத்ரம், சமக பாராயணம், ருத்ர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி ஆகியவை நடத்தப்படும்.

அதன் பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். மாலை 4 மணி முதல் 5:30 மணி வரை விக்னேசுவர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, 108 கலச பூஜை, அஸ்த்ர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடத்தப்படும்.

மாலை 6 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு ருத்ராபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறும். பக்தர்கள் ருத்ராபிஷேகத்துக்காக பால், தயிர் மற்றும் சர்க்கரை, பழவகைகள், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி, எண்ணை ஆகியவற்றை கோயில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி