ஹோம் /மதுரை /

மதுரை| மாட்டுத்தாவணியில் விடிய விடிய பொங்கல் பொருட்கள் விற்பனை

மதுரை| மாட்டுத்தாவணியில் விடிய விடிய பொங்கல் பொருட்கள் விற்பனை

X
பொங்கல்

பொங்கல் விற்பனை

Madurai pongal sales | மதுரை மாட்டுத் தாவணியில் விடிய விடிய பொங்கல் பொருள்கள் விற்பனை நடைபெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் படும் ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மதுரை சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அனைவரும் இங்கு வந்து தான் பொங்கல் பொருட்களை வாங்கி செல்வது என்பது வழக்கம். இதனால் மாட்டுத்தாவணி பகுதியில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் ஆர்வமாக திரண்டனர்.

பொங்கல் என்றாலே முதலில் கரும்புகள், பானைகள் தான். சாரை சாரையாக கரும்புகள் மற்றும் வண்ண வண்ண பானைகளை மதுரையில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து விற்பனை செய்கின்றார்கள். 12 கரும்புகள் அடங்கிய கட்டு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

முக்கால் கிலோ மற்றும் அரை கிலோ அளவிலான பொங்க பானைகள் 170 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. பொங்க பானையில் கட்டப்படும் மஞ்சள் கொத்து 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த காலத்து முன்னோர்களின் கூற்றுப்படி தை முதல் பங்குனி வரை பொழியும் பனிப்பொழிவு விஷ பனிப்பொழிவு என்பதால் நோய் தொற்று தாக்காமல் இருப்பதற்காக கூரை பூ, ஆவாரம் பூ, வேப்பிலை மாவிலை போன்ற பொருட்களை தை முதல் நாளில் நிலை வாசலில் கட்டுவார்கள். இந்த இந்தப் பொருட்கள் அனைத்தும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் படுகின்றது.

Pongal 2023 : மதுரை ஆரப்பாளையத்தில் பொங்கல் விற்பனைக்கு குவிந்துள்ள வண்ண, வண்ண மண் பானைகள்...

பூஜைக்கு தேவைப்படும் பொருட்கள் என பழங்கள், பூக்கள், சந்தனம், குங்குமம், வாழை இலை அனைத்து வகையான பொருட்களும் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் விடிய விடிய விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றார்கள்.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai