முகப்பு /மதுரை /

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் திருக்கோவிலில் ஏப்ரல் 7ல் பூச்சொரிதல் விழா!

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் திருக்கோவிலில் ஏப்ரல் 7ல் பூச்சொரிதல் விழா!

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

Madurai News : இந்த ஆண்டுக்கான மதுரை தெப்பக்குளம் மாரியம்மன்  திருக்கோவிலில் பூச்சொரிதல் விழா ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையை திருவிழா நகரம் என்று அழைப்பதற்கு ஏற்றார்போல் மதுரையில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோவிலில் பூச்சொரிதல் விழா ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் உபக்கோவிலான மாரியம்மன் தெப்பக்குளம் திருக்கோவிலில் 1,432-ம் பசலி பூச்சொரிதல் விழா வரும் ஏப்ரல் 7ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அன்றைய தினம் மாலை 6:00 மணி அளவில் மாரியம்மன் மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லாக்கில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் அம்மன் சன்னதி கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி தெரு, கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி, யானைகள், வடக்குவெளி வீதி, கீழ வெளி வீதி, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோவில் வந்து சேரும். அதன் பின்னர் அருள்மிகு மாரியம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் தீபாரத்னை நடைபெறும்.

எனவே மாரியம்மன் இந்த வீதிகளில் புறப்பாடகி வரும் சமயம் பக்தர்கள் தரிசனம் செய்து மாரியம்மன் அருளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai