முகப்பு /மதுரை /

தெப்ப திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் ஜொலிக்கும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

தெப்ப திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் ஜொலிக்கும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

X
மதுரை

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

Madurai Mariyamman Theppakulam : மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மற்றும் கோவில்கள் வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் கோவில்களும், கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களும் பெயர்போனது. அந்த வகையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவான மீனாட்சி திருக்கல்யாணம் முதல் கள்ளழகர் புறப்பாடு ஆகி வைகை ஆற்றல் எழுந்தருளுதல் நிகழ்வு வரை மதுரையே களைக்கட்டும். அதற்கு அடுத்தபடியான திருவிழாவான மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெறும் தெப்ப உற்சவம் ஆகும். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் ஜனவரி 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவை தொடர்ந்து பிப்ரவரி 4ம் தேதி சுவாமியும் அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். இந்நிகழ்வையொட்டி கோவிலின் சார்பாக மதுரை மாரியம்மன் திருக்கோவில் மற்றும் தெப்பக்குளத்தில் உள்ள நீராளி மண்டபம் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்குகளால் ஜொலிக்கும் மாரியம்மன் தெப்பக்குளம் பார்ப்போருக்கு கண் கவரும் வகையில் இருப்பதால் இதனை காண்பதற்கு எனவே மக்கள் கூட்டம் அதிகமாக கூடுகிறது.

மேலும், அங்கு வரும் பொதுமக்கள் அனைவரும் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தெப்ப திருவிழாவின்போது தெப்பக்குளத்தில் சுற்றி வரும் தெப்பத்தை தயார் செய்யும் ஏற்பாடுகளும் நடைபெறுகிறது. விரைவில் தெப்பம் கட்டும் பணிகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai