முகப்பு /மதுரை /

மதுரை மக்கள் ஷாக்.. மாரியம்மன் தெப்பக்குளத்தில் குறையும் தண்ணீர்!

மதுரை மக்கள் ஷாக்.. மாரியம்மன் தெப்பக்குளத்தில் குறையும் தண்ணீர்!

X
மதுரை

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

Madurai District | மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதினால் தண்ணீர் குறைந்து வருகிறது. பிளாஷ்டிக் பொருட்கள் மிதந்து காணப்படுகின்றது. 

  • Last Updated :

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில்,திருமலை நாயக்கர் மகாலுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கக்கூடிய இடம் தான் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்.

சமீப காலமாக இந்த தெப்பக்குளத்தில் மதுரை மாநகராட்சி சார்பாக பல்வேறு உணவு கடைகளும் விளையாட்டு தளர்களும் படகு சவாரிகள் போன்றவை அமைக்கப்பட்டு முழுக்க முழுக்க பொழுது போக்கு இடமாக மாறிவிட்டு வருகின்றது. இதுபோக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில், அவற்றுள் வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் விடப்பட்டு குளம் எப்பொழுதும் நிரம்பியே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு சித்திரை மாதத்திற்கு முன்கூடியே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதினால், மாரியம்மன் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் படிப்படியாக குறைய ஆரம்பித்து விட்டது. இது போக கடும் வெயிலின் தாக்கத்தினால் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள் இறந்து மிதக்கின்றன. மேலும், குளத்தின் உள்ளே ஆங்காங்கே பிளாஸ்டிக் போன்ற கழிவுப்பொருட்களும் மிதந்து காணப்படுகின்றது.

top videos

    இன்னும் சில நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு சுற்றுலா தலமாக இருக்கக்கூடிய இந்த இடத்தில் அதிகமாக கூட்டம் கூட ஆரம்பிக்கும் என்பதால் குளத்தில் தண்ணீர் நிரப்பியும் குளத்தை சுத்தம் செய்தும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

    First published:

    Tags: Local News, Madurai