முகப்பு /மதுரை /

மதுரை மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்- தெப்பம் கட்டும் பணி தீவிரம்

மதுரை மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்- தெப்பம் கட்டும் பணி தீவிரம்

X
மதுரை

மதுரை தெப்பக்குளம்

Madurai | மதுரை மாரியம்மன் கோவிலில் தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தெப்பம் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையின் புகழ்பெற்ற திருவிழாவான மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெறும் தெப்ப உற்சவம்பிப்ரவரி மாதம் 4-ம் தேதி நடைபெறுகின்றது. ஜனவரி 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்னும் மூன்று நாட்களில் நடைபெற உள்ளது.

இவ்விழாவினை முன்னிட்டு கோவிலின் சார்பாக தெப்பக்குளம் மற்றும் மாரியம்மன் கோவில் மின் ஒளியால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் தெப்பத் திருவிழாவின் முக்கிய ஏற்பாடான தெப்பம் கட்டும் பணிகள் காலை முதல் மாலை வரை தீவிரமாக நடைபெற்ற வருகின்றது. கோவிலின் சார்பாக பத்திற்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

தெப்பக்குளம்

மேலும் சுவாமியும், அம்மனும் தெப்பத்தில் எழுந்தருளி காலை இரண்டு முறை மற்றும் மாலை ஒரு முறை என்று மொத்தமாக மூன்று முறை தெப்பத்தை உலா வருவதற்கு ஏதுவாக குளத்தின் நான்கு புறத்தில் உள்ள தெப்பக் குள படிக் கட்டுகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டில் பரிசுகளை குவிக்கும் மாடுபிடி வீரர் ஜெய்ஹிந்த்புரம் EB விஜய்.. இவரை ஞாபகம் இருக்கா?

இதனைப் பார்த்துச் செல்லும் மதுரை மக்கள் இத்தெப்பத்தில் சுவாமியும் அம்மனும் வளம் வருவதைக் காண ஆர்வத்துடன் உள்ளனர்.

First published:

Tags: Local News, Madurai