முகப்பு /மதுரை /

மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்டில் போகக்கூடாது!

மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்டில் போகக்கூடாது!

மதுரை போக்குவரத்து மாற்றம்

மதுரை போக்குவரத்து மாற்றம்

Madurai route change | மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சரக்கு வாகனங்கள் வந்து செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்தில் மாற்றம் செய்து காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை உலகபுகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் நிகழ்விலிருந்து பூப்பல்லாக்கு, தேரோட்டம், தடம் பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் 4 மாசி வீதிகளிலும் நடைபெறும்.

இது குறித்து மதுரை போக்குவரத்து காவல்துறை சார்பில் கூறியிருப்பது, இந்த நிகழ்வினை மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காண மக்கள், பக்தர்கள் என அதிகமானோர் வருகை தருவார்கள். இந்த நிலையில் நான்கு மாத வீதிகளிலும் அதிகமான கடைகள் இருப்பதினால் போக்குவரத்து இடையூறின்றிஇருக்ககோயிலைசுற்றியுள்ள மாசி, வெளி வீதிகளில்மினி, சரக்கு வாகனங்கள் போன்ற வாகனங்கள் வந்து செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.அந்த வகையில் திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு காலையிலிருந்து 12:30 மணி வரை சரக்கு வாகனங்கள் மாசி வீதிகளில் வருவதற்கு அனுமதி இல்லை.

இதையும் படிங்க | மணக்கோலத்தில் ஜொலித்த மீனாட்சி - சுந்தரேஸ்வரர்.. மகிழ்ச்சியில் மதுரை மக்கள்!

இதேபோல் திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு இரவில்மீனாட்சியம்மன்பூப்பல்லாக்கில்எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதால் மாலை 6மணியில் இருந்துஇரவு 12 மணி வரைக்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. அதன் பிறகு 3 மணி வரை மாசி வீதிகளில் வர அனுமதிக்கப்பட்டுள்ளது.இதே போல் மே 3 திருத்தேரோட்டம் நிகழ்வு நடைபெறும் என்பதால் அன்று அதிகாலை 5 மணியிலிருந்து 12:00 மணி வரைக்கும் நான்கு மாசி வீதிகளிலும் முழுவதுமாக போக்குவரத்து தடை செய்யப்படுகின்றது. அன்று இரவு மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமி தடம் பார்ப்பதற்கு வருவதினால் அன்றும் மாலை 6 மணியிலிருந்து இரவு 12 மணி வரைக்கும் முழுவதுமாக சரக்கு வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

இவ்வாறு சரக்கு வாகனங்கள் அனுமதித்த நேரம் மட்டும் கீழமார்ட் மற்றும் மாசி வீதிகளில்அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Madurai, Madurai Chithirai Festival