ஹோம் /மதுரை /

பல ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய மாடக்குளம் கண்மாய் - மதுரை மக்கள் மகிழ்ச்சி!

பல ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய மாடக்குளம் கண்மாய் - மதுரை மக்கள் மகிழ்ச்சி!

மாடக்குளம் கண்மாய்

மாடக்குளம் கண்மாய்

Madurai madakulam lake | மதுரை மாநகருக்குள் 326 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாநகரின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக 167 மில்லியன் கன அடி நீர் தேங்கும் வகையில் அமைந்துள்ள ஒரு கண்மாய் தான் மதுரை மாடக்குளம் கண்மாய். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

தமிழகத்தில் ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு அடுத்தபடியாக பெரியதாக விளங்குவது மதுரை மாடக்குளம் கண்மாய்.

வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரானது வாய்க்கால்கள் மூலமாக இக்கண்மாய்க்கு வந்து சேரும் வகையில் இதன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கண்மாயை பாதுகாத்து தேவையான நேரத்தில் தண்ணீர் திறந்துவிட மாடக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் மன்னராட்சி காலம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மடை காப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இப்போதும் அவர்களே பரம்பரையாக மடையை காத்து வருகிறார்கள்.

இதையும் படிங்க :  மதுரை மீனாட்சியின் நிஜப்பெயர் முதல் சாதி வரி நீக்கம் வரை... கல்வெட்டு ஆய்வு முடிவுகள் சொல்லும் புதிய உண்மைகள்...

இதுபோல் தமிழகம் முழுவதும் முக்கியமான கண்மாய்களை பாதுகாக்க அப்பகுதியில் வசிக்கும் சில குடும்பத்தினர் பெருமையுடன் இருந்து வருகிறார்கள்.

தற்போது வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்துள்ள நிலையில் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டி திறந்துவிடப்பட்டதால் மாடக்குளம் கண்மாய் நிரம்பியது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் மழையால் கண்மாய் நிறையவில்லை.

பல ஆண்டுகளுக்கு பின் தற்போது இந்த கண்மாய் அதன் முழு அளவை எட்டிவிட்டது என்பதை அடையாளப்படுத்தும் குத்துக்கல்கள் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இயற்கை பிரம்மியத்துடன் காட்சியளிக்கும் இந்த கண்மாயை அவ்வழியாக செல்லும் பலரும் தங்களது வாகனத்தை நிறுத்தி அங்கு சிறிது நேரத்தை செலவிட்டு செல்கின்றனர்.

மேலும் மாடக்குளம் பகுதியிலுள்ள மக்கள் கண்மாயில் உள்ள மீன்களை பிடித்து விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிகொள்கின்றனர். இவை அனைத்துக்கும் மேலாக மாடக்குளம் கண்மாயில் நீர் நிறைந்துள்ளதால் மதுரை மாநகர மக்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. நிலத்தடி நீர்மட்டம் உயரும், இதன் மூலம் இப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai