ஹோம் /மதுரை /

ஜிகர்தண்டா மட்டுமல்ல மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடாவும் ஃபேமஸ் தான்.. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் இது..!!

ஜிகர்தண்டா மட்டுமல்ல மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடாவும் ஃபேமஸ் தான்.. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் இது..!!

மதுரை

மதுரை ஶ்ரீ மாப்பிள்ளை விநாயகர் சோடாவின் வரலாறு!!

Madurai Maapillai Vinayakar Soda : மதுரை மாநகர் நேதாஜி சாலையில் அமைந்துள்ள கடை தான் இந்த மாப்பிள்ளை விநாயகர் சோடா கடை சரியாக 127 வருடங்களாக ஒரே கட்டிடத்தில் 5 தலைமுறைகளாக நடத்தப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மதுரை மாநகர் மையப்பகுதியில் நேதாஜி சாலையில் அமைந்துள்ளது இந்த மாப்பிள்ளை விநாயகர் சோடா கடை. மதுரையின் சிறப்புகளாக மீனாட்சி சுந்தேசுவரர் கோயில், வண்டியூர் தெப்பக்குளம், சித்திரை திருவிழா என்று பலவற்றை சொல்லிகொண்டே போகலாம் அந்த வகையில் தலைமுறை தலைமுறையாக மதுரைவாசிகளுக்கு ஃபேவரைடாக திகழ்ந்து வருகிறது ஶ்ரீ மாப்பிள்ளை விநாயகர் சோடா..

மதுரையில் ஜிகர்தண்டா மட்டுமல்ல இந்த சோடாவும் ஃபேமஸ் தான்.. சுமார் 130 வருடங்களாக 5 தலைமுறைகள் கடந்து இந்த சோடா நிறுவனம் இயங்கி வருகிறது.  கோக், ஃபெப்ஸி போன்ற நிறுவனங்களின் முன்னோடி என்று கூட இதை கூறலாம்.. 90ஸ் கிட்ஸ்கள் வரை இந்த சோடாவின் ருசிக்கு கட்டுப்பட்டிருந்தனர்.. ஆனால் காலப்போக்கில்  புது வரவுகளின் காரணமாக மக்கள் மனதில் இருந்து சோடாக்கள் அகண்டு சென்றன..

மாப்பிள்ளை விநாயகர் சோடா

இத்தனை போட்டிகளுக்கு மத்தியிலும் கூட நூறாண்டுகளை கடந்து தனித்துவம் பெற்று நிற்கிறது மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனி.. இன்றளவும் இந்த சோடாக்களுக்கு மதுரை சுற்றுப்புறவாசிகள் அளித்துவரும் வரவேற்பின் காரணமாக தலைமுறைகளை கடந்து நீடித்து வருகிறது இந்நிறுவனம்.

1907ல் ஜெர்மனியில் இருந்து சோடா தயாரிப்பு முறைகளை கற்றுத்தேர்ந்து, கோலி சோடா பாட்டில்களை இறக்குமதி செய்து மதுரையில் தொழில் தொடங்கியுள்ளார் தற்போது இந்நிறுவனத்தை நடத்தி வரும் கதிர்வேலின் தாத்தா..

மாப்பிள்ளை விநாயகர் சோடா நிறுவனம் குறித்து கதிர்வேல் கூறியதாவது, “மதுரையில் இதற்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட சோடா நிறுவனங்கள் இயங்கி வந்தன. தற்போது மாப்பிள்ளை விநாயகர் சோடா நிறுவனத்தையும் சேர்த்து 5 சோடா நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பலரும் இன்று பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள குளிர் பானங்களை நோக்கி நகர்ந்து சென்ற நிலையிலும், சுமார் ஒரு கிலோ எடை கொண்ட கோலி சோடா பாட்டில்களில் பழமை மாறாமல் இன்றும் நாங்கள் சோடாவை விற்பனை செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னதாக இளைஞர்களிடையே உள்ளூர் தயாரிப்புகளின் மீது ஓரளவு கவனம் திரும்பியிருக்கிறது.

இன்றைய தலைமுறையினரிடையே மேலும் வரவேற்பு கிடைத்தால், அடுத்த தலைமுறைக்கும் இந்த தொழில் நகரும் என்றார். இந்த நிறுவனம் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நேதாஜி சாலையில் அமைந்துள்ளது.

Published by:Arun
First published:

Tags: Local News, Madurai