கடந்த சில நாட்களாகசென்னையை விட மதுரையில் வெயில் சற்று அதிகமாகவே இருக்கின்றது.சித்திரை மாதத்தில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் காலமாற்றத்தால் பங்குனி மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கும் நிலையில் உள்ளது.
இதனால் மதுரை மக்கள் காலை 11 மணியிலிருந்து மதியம் நான்கு மணி வரை வெளியில் வருவதை தவிர்க்கின்றனர். இருந்தாலும் வெளியில் வேலைக்கு செல்பவர்கள்வெயிலின்தாக்கத்தை தாங்க முடியாமல், மதுரை குருவிக்காரன் சாலை பகுதியில் அதிகமாக கூடுகின்றார்கள்.
ஏன்என்றால், வெயில் காலத்தில் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் நுங்கு, இளநீர்,தர்பூசணி, கம்பங்கூழ் போன்ற பல பொருட்கள் இங்கு ஒரே இடத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. நுங்கில் அதிகமாக இரும்பு சத்து, கால்சியம், பொட்டாசியம், நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் இருப்பதால் மேலூர் வாடிப்பட்டி போன்ற பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டுஇங்கு 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் உடம்புக்கு ரொம்பவே குளிர்ச்சியை தரக்கூடிய பழம் தான் தர்பூசணி, இந்த பழங்களை திண்டிவனம் போன்ற பகுதிகளில் இருந்து வாங்கி வந்து, இங்கு முழு பழமாகவும் விற்பனை செய்தும், தர்பூசணிகளை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அதில் நன்னாரி சர்பத்தை மிக்ஸ் செய்து குளிர் பானமாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இது போக வெயில் காலத்திற்கு தேவையான நீர்ச்சத்தையும் குளிர்ச்சியும் தரக் கூடிய வகையில் செவ்விளநீர், பச்சை இளநீர் போன்ற இளநீர் வகைகள்30 முதல் 50 அல்லது60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல,கம்பங்கூழ், கேப்பக்கூள் போன்ற கூழ் வகைகள் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. வெயிலில் இருந்து உடம்பை காத்து, குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மதுரை மக்கள் அதிகமாக இங்கு வருவதால் சமீபகாலமாக இந்த இடம் சம்மர்ஸ் ஸ்பாட் ஆக மாறிவருகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Tourist spots