மதுரை மாநகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி - மேலமாசி வீதி இணையும் சந்திப்பில் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர்.
இத்தலம் பூலோக கைலாயம் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக சொக்கநாதர்(சிவன்) உம், மத்தியபுரி நாயகி (அம்மன்) யும் உள்ளனர். உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தர் ஆவார். தல விருட்சம் வில்வம் மரம் ஆகும். இக்கோயில் மேற்கு திக்கு நோக்கி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பெயருக்கான காரணம்:
மக்கள் இப்பிறப்பில் செய்த பாவங்களை சிவபெருமான் இந்த பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால் இக்கோயில் மூலவர் சொக்கநாதரை இம்மையிலும் நன்மை தருபவர் என்று அழைக்கின்றனர். மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் இக்கோயில் பூமித்தளமாக அறியப்படுகிறது.

இம்மையிலும் நன்மை தருவார் கோவில்
திருமணமாகாதவர்கள் இக்கோயில் அம்மனை வேண்டினால் நல்ல வரன் அமையும் என்பதால் இக்கோயில் அம்மனுக்கு ’மாங்கல்ய வரபிரசாதினி' என்ற பெயருமுண்டு. மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பூமித் தலமென்பதால் புது கட்டிடம் கட்டத் துவங்குபவர்கள் பிடி மண்ணை எடுத்து வந்து வழிபடுவதுண்டு.

கோவில் மூலவர்
சிவபெருமானே மதுரையின் அரசராக பொறுப்பேற்கும் முன் இங்கு லிங்க பூஜை செய்ததால் மக்கள் பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் சிவனுக்கு ’ராஜ உபச்சார அர்ச்சனை’ செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

கோவில் தெப்பக்குளம்
கோயிலிலுள் நுழைந்ததும் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தின் வரைபடங்கள் அமைந்துள்ளன. உள் நுழைந்ததும் மூலவர் சன்னதி அமைந்துள்ளது. அதன் எதிரேயே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பாக இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வதும் வழக்கமாக உள்ளது. கோயிலின் உட்புறத்தில் ஒரு சிறிய குளம் ஒன்றும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்மையில் நன்மை கோயிலுக்கான கூகுள் மேப்:
திருவிழா:
இக்கோயிலின் முக்கிய திருவிழாவாக மாசி மாதத்தில் பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், ஆவணியில் மூலவர் சிவனுக்கு பூஜை, சிவராத்திரி மற்றும் திருக்கார்த்திகை கொண்டாடப்படுகின்றன.
முகவரி:
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே அமைந்திருக்கும் கூடல் அழகர் பெருமாள் கோயில் அருகேயே இந்த இம்மையிலும் நன்மை தருவார் கோயில் அமைந்துள்ளது. (இம்மையிலும் நன்மை தருவார் கோயில் , மேல மாசி வீதி, மதுரை - 625001)
கோயில் நிர்வாக அலைபேசி எண்கள்: 91-45265 22950
94434 55311, 93451 55311, 92446 55311.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.