Home /madurai /

பயிர் சாகுபடிக்கு ரூ.60,000 மானியம் விவசாயிகள் விண்ணப்பிப்பது எப்படி? 

பயிர் சாகுபடிக்கு ரூ.60,000 மானியம் விவசாயிகள் விண்ணப்பிப்பது எப்படி? 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரையில் மானியத்தில் பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அதிக மகசூல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரக காய்கனிகளான கத்தரி, மிளகாய், தக்காளி, வெங்காயம், பல்லாண்டு பயிா்களான மா, கொய்யா போன்றவற்றில் அடா்நடவு, இதர பழப் பயிர் பப்பாளி, எலுமிச்சை, அத்தி, நெல்லி மற்றும் மல்லிகை, சம்பங்கி போன்ற மலா் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும்.

    நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்ய ரூ.1.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு 40 சதவீதம் அளவுக்கு சாகுபடி மானியமாக வழங்கப்படும். பயிா் வாரியாக ஹெக்டேருக்கு குறைந்தது ரூ.12 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்ய விரும்பும் தோட்டக்கலைப் பயிா்களுக்கு https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டும் விண்ணப்பத்தை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி