முகப்பு /செய்தி /மதுரை / ஆவின் பணியாளர் தேர்வு வாரியம் தொடங்க வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு...!

ஆவின் பணியாளர் தேர்வு வாரியம் தொடங்க வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு...!

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

Madurai High Court | உத்தரவு நகல் கிடைத்த 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Madurai, India

ஆவின் பணியாளர் நியமனம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவில்,  “தமிழ்நாடு மீன்வளம் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை மற்றும் அனைத்து கூட்டுறவுச் சங்கங்களிலும்  பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக கூட்டுறவு ஆவின் பணியாளர் தேர்வு வாரியம் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை, அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.

Also Read : வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி எடிட் செய்யலாம்... வருகிறது புதிய அம்சம்...!

மேலும், தமிழக அரசின் மீன்வளம் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை ஆணையர் மற்றும் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் பொது மேலாளர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நகல் கிடைத்த 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Madurai High Court