முகப்பு /மதுரை /

மதுரையை பற்றி தெரிந்துகொள்ள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேப் வெளியீடு!

மதுரையை பற்றி தெரிந்துகொள்ள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேப் வெளியீடு!

X
மதுரையை

மதுரையை பற்றி தெரிந்துகொள்ள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேப் வெளியீடு

Madurai Heritage Map | மதுரை தியாகராஜன் கல்லூரியில் இன்டக் அமைப்பின் மூலமாக மதுரையின் பாரம்பரியமான இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் மதுரை ஹெரிடேஜ் மேப் வெளியிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

இன்டாக் அமைப்பு மூலமாக மதுரை வைகை ஆற்றின் தெற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியில் உள்ள மதுரைபாரம்பரியமான நினைவுச் சின்னங்கள், வழிபாட்டுத்தலங்கள், அரண்மனைகள், ஆங்கிலேயர் கால நினைவுச் சின்னங்கள், மலைக்குன்றுகள், வற்றாத நீர்நிலைகள், பறவை கண்காணிப்பு இடம், போட்டோ ஷூட் ஸ்பாட் மற்றும்அழகிய கிராமப்புறம் என மதுரையோட அழகிய இடங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மதுரை ஹெரிடேஜ் மேப் அதாவது மதுரையின் பாரம்பரியமான நினைவு சின்ன வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரைபடத்தை மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராசர்கல்லூரியில், கல்லூரியின் தலைவர் ஹரித் தியாகராஜன்வெளியிட்டார். இதனை மகாத்மா காந்தி பள்ளி தலைவர் சித்ரா பெற்றுக் கொண்டார். முதல் கட்டமாக மதுரை வைகை ஆற்றை சுற்றியுள்ள 30 இடங்களுடன்தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த வரைபடத்தை கார்ட்டூன் கிராபி பாஸ்கரன் அந்தந்த பகுதியில் உள்ள இடங்களைப் போல் தத்ரூபமாகவரைந்துள்ளார்.

மேலும், இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது. அதாவது கூகுளை(google) ஓப்பன் செய்து கொண்டு அதில் www.intachmadurai.org என்று சர்ச் செய்தால் intok வெப்சைட் ஓபன் ஆகிவிடும். அதிலுள்ளமெனுவில் மதுரை ஹெரிடேஜ் மேப் ஓப்பன் செய்ய வேண்டும் ஹெரிடேஜ் மேப் ஓப்பனானபிறகு, கூடவே தமிழ்நாடு மேப்பும்ஓப்பன் ஆகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மதுரை ஹெரிடேஜ் மேப் கூகுள் மேப்புடன் லிங்க் செய்திருப்பதால், தமிழ்நாடு மேப்பில் இடையப்பட்டி கோவில் காடு தேர்ந்தெடுத்தால், ஆட்டோமேட்டிக்காக கூகுள் மேப்பில் கோவில்காடுக்கு செல்வதற்கான வழியை காட்டும். இதேபோல் விளக்குத்தூண், விளாச்சேரி கிராமம், யானைமலை, அரிதாப்பட்டி, கிடாரிப்பட்டி போன்ற மதுரையின் பாரம்பரியமான இடங்களுக்கு செல்ல இந்த ஹெரிடேஜ் வரைபடம் நமக்கு வழிகாட்டும்.  இந்த வரைபடம்மதுரை மக்களுக்கு மட்டும் அன்றி அனைவருக்கும்,மதுரையின் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

top videos
    First published:

    Tags: Local News, Madurai