தென் தமிழகத்திலேயே முதன்முதலாக ஒரே கட்டடத்தில் 23 அறுவை சிகிச்சை அரங்குகள் கொண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் குறிப்பாக அறுவை சிகிச்சை கருவிகள் இருந்தும் அதற்கான அறையோ இடமோ இல்லாத காரணத்தினால் 2021 ஆம் ஆண்டு ஆங்கிலர்கள் கட்டிய பழைய முகப்பு கட்டிடம் இடிக்கப்பட்டு 265 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றது.
ஜப்பான் நாட்டின் சைக்கான் நிறுவனத்தின் 85 சதவீதம் நிதியும், மாநில அரசின் 15 சதவீதம் நிதிஉதவியுடன் 155 கோடி மருத்துவமனை கட்டிடத்திற்கும், 110 கோடி மருத்துவ உபகரணங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைக்கு டப் கொடுக்கக்கூடிய வகையில் ஏழு தடங்களுடன் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடம் நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு அலைகழிக்கப்படுவதைத் தவிர்க்க கூடிய வகையில் ஒரே கட்டிடத்தில் 23 அறுவை சிகிச்சை தியேட்டர்கள் புதிய சிகிச்சை அறைகள் ,அதிநவீன மருத்துவ கருவிகள் என சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனை கட்டிடம் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் எப்பொழுதுமே பரபரப்பாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய பனகல் சாலை பகுதியில் தற்போது கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்தில் பார்க்கிங் வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Rajaji Govt Hospital