முகப்பு /மதுரை /

வளரி, இரும்பு ஹெல்மேட்... மதுரை அரசு அருங்காட்சியகத்தில் இருக்கும் அரிய பொருள்கள் தெரியுமா?

வளரி, இரும்பு ஹெல்மேட்... மதுரை அரசு அருங்காட்சியகத்தில் இருக்கும் அரிய பொருள்கள் தெரியுமா?

X
மதுரை

மதுரை அருங்காட்சியகம்

Madurai | மதுரை தல்லாகுளம் காந்தி மியூசியம் பகுதியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால தமிழர்கள் முதற்கொண்டு ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பொருட்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள காந்தி மியூசியத்தில் தான் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது.`1981இல் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் சென்னை அருங்காட்சியகத்தின் ஒரு கிளை அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகின்றது.

இந்த அருங்காட்சியகத்தில் எந்த மாதிரியான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்துஅருங்காட்சியக காப்பாளரிடம் மருதுபாண்டியன் விவரித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு வகையான பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுள்10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் பயன்படுத்திய பல்வேறு விதமான கற்கருவிகளும், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய மண்ணினால் செய்யப்பட்ட மண் பாண்டங்கள், விளக்குகள், குவளைகள் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவைஅகழாய்வில் கிடைத்த பொருட்களாகும்.

மதுரை அருங்காட்சியகம்

பழங்காலங்களில் மரச் சிற்பம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. கைவிடப்பட்ட தேர்களில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பல்வேறு வகையான மரச் சிற்பங்களும்,பழந்தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று எடுத்துரைக்கும் வகையில் அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி வளையம், கத்தி, அரிவாள் போன்ற பொருட்களும், மதுரையில் எடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகளான திருப்பாவை, மகாபாரதம், மருத்துவம் போன்ற பழங்கால ஓலை சுவடிகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிரான கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் லெதர் பப்பட் என்ற பொருள் பயன்படுத்தபட்டது. அவைகளும் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் உலோகப் பொருட்கள் ஆன நடராஜர் சிலைகளும் அந்தக் காலத்தில் குழந்தைகள்பயன்படுத்திய கிலுகிலுப்பு, பாசிமணிகள், உளவு சங்கிலிகள் மற்றும் ஆங்கிலேயர்கள் கம்பிகள் மூலமாக பயன்படுத்திய அளவைகளும் இங்கு இடம் பெற்றுள்ளது.

மேலும் அறிவியல் ரீதியாக பதப்படுத்தப்பட்ட விதவிதமான பாம்புகள், தேள்கள் போன்ற விலங்கினங்களும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.ஆங்கிலேயர் காலங்களில் போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களான வளரி, ஈட்டி, அருவாள் இரும்பினால் ஆன ஹெல்மெட், ஆள் உயரத் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் என பல்வேறு வகையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு 3,600 கி.மீ மாட்டு வண்டியில் தனி ஆளாக பயணம் செய்யும் சேலம் இளைஞர்.. என்ன காரணம்?

இதனை காண்பதற்கென்றே வெளிமாநில மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என பல்வேறு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றார்கள். இந்த காந்தி மியூசியத்தின் நுழைவு கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது.

First published:

Tags: Local News, Madurai