முகப்பு /மதுரை /

மதுரையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்.. கண்டுகொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அவதி!

மதுரையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்.. கண்டுகொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அவதி!

X
நீண்ட

நீண்ட ஆண்டுகளாக சாக்கடை அடைப்பு கண்டு கொள்ளாத மதுரை மாநகராட்சி

Madurai news | மதுரை 36 வது வார்டுக்கு உட்பட்ட கோமதிபுரம் பகுதியில் இருக்கக்கூடிய பாரதியார் தெருவில் சாக்கடையும் குப்பையும் சேர்ந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் 36 வது வார்டில் கோமதிபுரம் பகுதியில் இருக்கக்கூடிய பாரதியார் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாத காரணத்தினால் சாக்கடையும், பிளாஸ்டிக் குப்பையும் சேர்ந்து அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது.

இப்பகுதியில் இருக்கக்கூடிய இந்த சாக்கடை கால்வாய் கடந்த ஒரு ஆண்டுகளாக சாக்கடை நிரம்பி வழிகின்றது இதனை சரி செய்ய அப்பகுதியின் பொதுமக்கள் எத்தனையோ முறை மாநகராட்சி இடம் சொல்லியும் அதனை சரி செய்யாத காரணத்தினால் இந்த கால்வாயை அங்குள்ள பொதுமக்களே பெரிய பெரிய கற்களை கொண்டு மூடி உள்ளார்கள் இதனை மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் ஏதேனும் வேலை செய்யும் வரும்பொழுது அந்த கற்களை எடுத்துச் சென்று விட்டார்களாம்.

இதனால் இந்த கால்வாய் திறந்து இருப்பதினால் குப்பையும் சாக்கடையும் சேர்ந்து சாக்கடை செல்லாமல் அடைத்துக் கொண்டு துர்நாற்றம் வீசுகின்றது என்று அப்பகுதி மக்கள் மதுரை மாநகராட்சி மீது குற்றச்சாட்டு வைக்கின்றார்கள். சமீபத்தில் பெய்த மழையினால் சாக்கடையும், மழை நீரும் சேர்ந்து இந்த பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை இருந்தது.

இவ்வாறு மழைக்காலத்தில் இந்த சாக்கடை அடைப்பால் இந்த பகுதி முழுவதுமே அசுத்தமாக காணப்படுகின்றது. இதுபோக சமீபத்தில் இந்த தெருவில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேறிக் கொண்டே இருக்கின்றது.

மேலும், சாலை முழுவதும் ஆங்காங்கே குண்டும் குழியுமாய் இருக்கின்றது என்றும் நாங்கள் எத்தனையோ முறை நேரில் சென்றும் ,அதுமட்டுமல்லாமல் வாட்ஸ் அப்பில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் தற்பொழுது வரை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டு அப்பகுதி மக்கள், உடனடியாக மதுரை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து இதனை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையும் வைக்கின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Madurai