ஹோம் /மதுரை /

வீட்டிலேயே ஜிகர்தண்டா தயாரிப்பது எப்படி? சுயதொழிலில் சாதிக்கும் மதுரை பெண்..

வீட்டிலேயே ஜிகர்தண்டா தயாரிப்பது எப்படி? சுயதொழிலில் சாதிக்கும் மதுரை பெண்..

X
ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா கடையில் தமிழ்ச் செல்வி

Madurai Jigarthanda | மதுரையைச் சேர்ந்த பெண் வீட்டிலேயே ஜிகர்தண்டா தயாரித்துவிற்பனை செய்துவருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணி மதுரைபேமஸ்களில் ஒன்றான ஜிகர்தண்டா விற்பனை செய்ய முடிவு எடுத்தார்.வீட்டிலேயே ரசாயன கலப்படங்கள் ஏதும் இல்லாத ஜிகர்தண்டாவை தயார் செய்து வருகின்றார்.ஜிகர்தண்டாவை அடிக்கடி வாங்கி குடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் இதையே நாம் செய்து விற்கலாம் என்று எண்ணி முதல் முதலாக வீட்டிலே செய்து பார்த்துள்ளார். பின்பு தான் இத்தொழிலை வீட்டிலேயே செய்யத் தொடங்கியுள்ளார்.

ஜிகர்தண்டாவை வீட்டில் எப்படி செய்கின்றார்?

ஜிகர்தண்டாவுக்கு தேவையான மூலப் பொருளான பாலை சுண்ட காய்ச்சி அதில் வரும் பாலாடைகளைதனியாக காய்ச்சி வைத்துக் கொள்கிறார்கள். எட்டு மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சப்படும் இந்த பால் பொன்னிறமாக மாறிவிடுகின்றது. பின்பு குளிர்சாதனத்தில் ஏத்தி விடுகின்றார்கள். குளிர்சாதனத்தில் ஏற்றிய பாலை எடுத்து அதில் கடல் பாசி, பால் ஏடு மற்றும் இவர் வீட்டிலேயே ஜிகர்தண்டாவுக்கு தேவைப்படும் சர்பத் ஒன்றையும் தயார் செய்கிறார்.

தமிழ்ச் செல்வி
தமிழ்ச் செல்வி

சர்க்கரை தண்ணீரை காய்ச்சி அதில் வெட்டிவேரை போட்டு நன்றாக கொதிக்க வைத்த பின் சர்பத் கிடைக்கும். இதை அனைத்தையும் அளவான முறையில் கலந்து கொள்கிறார். பின்பு அதனையும் எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுகிறார்.

பிறகு ஜிகர்தண்டாவின் மேல் பகுதியில் போடப்படும் ஐஸ்கிரீமை தயார் செய்கிறார். அதற்கு காய்ச்சி வச்ச பாலை எடுத்துக் கொள்கிறார். ஐஸ்கிரீம் செய்வதற்கென்றுதனி மெஷின் ஒன்றையும் வைத்துள்ளார்.

அதில் ஐஸ் கட்டிகளை நிரப்பி நடுவில் உள்ள குவளையில் காய்ச்சி வச்ச பாலை கொட்டுகிறார். பின்பு மிஷின் ஓடும் பொழுது ஐஸ் கட்டி மற்றும் உப்பை மாறி மாறி கொட்டுகிறார். அப்பொழுதுதான் ஐஸ்கிரீம் பொங்கி வரும் என்று கூறுகிறார். பொங்கி வந்த ஐஸ்கிரீமையும் எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடுகின்றார்.

அவ்வளவுதான் இப்பொழுது தெப்பக்குளம் பகுதியில் இயங்கக்கூடிய இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஜிகர்தண்டாவை ஊற்றி அதன் மேல் குவளை மூலமாக ஐஸ் கட்டியை நிரப்பி அதற்கும் மேல் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று பாலாடையும் சேர்த்து கொடுத்து வருகின்றார்.

ஆபாச வீடியோ.. பள்ளி மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.. காதலன் உட்பட 3 பேர் கைது!

இத்தொழிலின் மூலம் இவருக்கு கிடைக்கும் லாபம் என்னவோ குறைவுதான் என்கிறார். ஏனென்றால் வரும் லாபத்தை முதலீட்டில் போட்டு விடுவதால் மிச்சம் 5000 ரூபாய் அல்லது 3000 ரூபாய் என்றுதான் லாபம் வருமாம்.இது தற்பொழுது போதும் என்றும் சுயதொழில் செய்வதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

First published:

Tags: Local News, Madurai