மதுரை காந்தி மியூசியம் பகுதியில் குழந்தைகளுக்கு கோடை காலத்தை முன்னிட்டு ஓவியம், சிலம்பம் ,நாட்டுப்புற கலைகள் போன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகள் காந்தி மியூசியம் மற்றும் அங்குள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியர் பகுதியில் இருக்கக்கூடிய இடம் தான்,இந்த மதுரை காந்தி அருங்காட்சியகம். மதுரையின் சுற்றுலாத்தலமாக இருக்கக்கூடிய காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி பற்றி பல்வேறு விவரங்களும், பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டுமே இந்த அருங்காட்சியகத்தில் கோடை காலத்தில் அதாவது மே மாதங்களில் குழந்தைகளுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெறுவது வழக்கம். குழந்தைகளுக்கு கோடை விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கிற்காகவும் அவர்களின் செயல்திறனைக் வளர்த்து கொள்வதற்காகவும் இந்த வகுப்புகள் நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அதில் ஓவியம், சிலம்பம், நாட்டுப்புற கலைகள், கராத்தே, யோகா பயிற்சி, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் கற்பித்தல் பயிற்சி, இது போக ஹிந்தி மொழி கற்பித்தல் பயிற்சி என பல்வேறு பயிற்சி வகுப்புகள் காலை 9 மணியிலிருந்து மதியம் 12:30 மணி வரைக்கும் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி வகுப்புகளில் மதுரையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் ஆர்வமுடன் கற்று வருகின்றார்கள். இவ்வாறு காந்தி மியூசியத்தில் நடைபெற்று வரும் ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளுக்கும் பயிற்சி கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இவ்வாறு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் கோடை விடுமுறை நாட்களை பயனுள்ளதாகவும், குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காகவும் காந்தி மியூசியத்தில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்த்து விட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai