Home /madurai /

மதுரையில் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மதுரையில் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் மழை பெய்து வருவதால், மதுரை மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணையில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சோழவந்தான் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் 71 அடி உயர வைகை அணையில் 70 அடி என்ற அளவில் தண்ணீர் நிரம்பி உள்ளது. வைகை ஆற்றுக்கு உபரியாக வரும் தண்ணீர், அப்படியே ஆற்றுக்குள் திறந்து விடப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களில், வைகை ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் பருவமழை படிப்படியாக குறைய தொடங்கியது. வைகை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி அடியாக குறைந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. வைகை அணை ஏற்கனவே 70 அடியை தொட்டுவிட்டதால், பெருமளவில் உபரி நீரை திறந்து விடுவது என்று பொதுப்பணித்துறை முடிவு செய்தது.

    அதன்படி வைகை ஆற்றில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    வைகை அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. எனவே வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் கூடுதல் கவனம், பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வைகை ஆற்றில் இறங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஆடு-மாடு உள்ளிட்ட கால்நடைகளை வைகை ஆற்றில் இறங்க அனுமதிக்க வேண்டாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சோழவந்தான் பகுதியில் வருவாய்துறையினர் முழு வீச்சில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். தீயணைப்பு துறையினருடன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல், குவித்துறை, மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், தேனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வருவாய்துறை, தீயணைப்புதுறை, பேரிடர் மீட்பு குழுவினர்களும் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி