முகப்பு /செய்தி /மதுரை / பரவி வரும் வைரஸ் காய்ச்சல்... மதுரையில் 38 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்!

பரவி வரும் வைரஸ் காய்ச்சல்... மதுரையில் 38 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்!

மதுரையில் மருத்துவ முகாம்

மதுரையில் மருத்துவ முகாம்

Madurai campaign | மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2' காய்ச்சல் பரவத் துவங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சியை பொறுத்தவரையில் 38 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்கள் வாயிலாக 25,000 நபர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 200 நபர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதும் அதில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் தினசரி 100 பேர் வரையில் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் இன்று முதல் புறநோயாளிகள் சிகிச்சை தனி பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன், மதுரை.

First published:

Tags: Fever, Local News, Madurai