Home /madurai /

மதுரை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு... பிரதமர் நிதியை பெற இதைச் செய்யுங்கள்

மதுரை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு... பிரதமர் நிதியை பெற இதைச் செய்யுங்கள்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மதுரை விவசாயிகள் பிரதமர் நிதியைப் பெறுவதற்கு ஆவணங்களை அப்லோட் செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை மாவட்ட சேர்ந்த விவசாயிகள் விவசாயிகள் 12 வது தவணையாக கிசான் நிதியை தொடர்ந்து பெற ஆவணங்களை புதுப்பிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கு ஆதார் எண்களை இணைக்கவில்லை . ஆகையால் இந்த நடை முடை துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பாரத பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் ரூ.2000 வீதம் 3 தவணையாக ரூ.6000 ஆண்டுக்கு செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 2.15 லட்சம் விவசாயிகள், இதற்காக விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1.26 லட்சம் பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

12 ஆவது தவணையாக ரூ. 2,000 பெறுவதற்கு பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்ட பி.எம். கிசான் திட்ட ஆதாா் எண்ணுடன் தொலைபேசி எண்ணை தவறாமல் இணைக்க வேண்டும். ,இதை கே.ஓய்.சியாக செய்ய வேண்டும்.

இதில், யாரேனும் தொலைபேசி எண்ணை மாற்றம் செய்திருந்தால், தற்போது பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண்ணை ஆதாா் எண்ணுடன் இணைக்க அருகிலுள்ள அஞ்சல் நிலையத்தை அணுகி இணைத்துக் கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன் பின்னா் இ. கே.ஒய்.சி. செய்து கொள்ள 48 மணிநேரத்துக்குள் அருகில் உள்ள இ - சேவைமையத்தை அணுகி பி.எம். கிசான் வலைதளத்தில் தங்களது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து பின்னா் பெறப்படும் ஓ.டி.பி. எண்ணை பதிவேற்றம் செய்து தங்களது பி.எம். கிசான் திட்ட கணக்கு எண்ணுக்கு 12 ஆவது தவணை நிதி பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், விவசாயிகள் தங்களது பட்டாட் , சிட்டாட் , ஆதாா் விவரங்களை கட்டாயமாக தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரிடம் கொடுத்துத் உழவா் அலுவலா் தொடா்பு திட்ட செயலி மூலம் நில ஆவணங்களைச் சரிபாா்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

இதையும் வாசிக்க: மதுரை காந்தி மியூசியத்தில் 5 நாள் அகிம்சை சந்தை, இயற்கை திருவிழா!

இந்நிலையில் மதுரையை சேர்ந்த வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:-

"மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிஷான் திட்டத்துக்காக விண்ணப்பித்து இருந்த பலர் ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்ணை முறையாக இணையதளத்தில் பதிவு செய்யவில்லை.

எனவே அவர்கள் மேற்கண்ட விவரங்களை பதிவு செய்யும் வகையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் கிஷான் திட்ட இணையதளத்தில் அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களை பதிவு செய்த பிறகு, அன்னாரின் வங்கி கணக்குகளில் தலா 6000 ரூபாய் வரவு வைக்கப்படும்” என மதுரை மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Farmers, Madurai, PM Kisan

அடுத்த செய்தி