Home /madurai /

மதுரை காந்தி மியூசியத்தில் 150 ஸ்டால்களுடன் ‘அகிம்சை சந்தை’ திருவிழா

மதுரை காந்தி மியூசியத்தில் 150 ஸ்டால்களுடன் ‘அகிம்சை சந்தை’ திருவிழா

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை காந்தி மியூசியத்தில் செப்டம்பர் 22 முதல் 26 வரை 150 ஸ்டால்களுடன் ‘அகிம்சை சந்தை’ திருவிழா நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை காந்தி மியூசியத்தில் உள்ளூர் வாழ்வாதாரம், கிராமப்புற பொருளாதாரம், இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் 150 ஸ்டால்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயற்கை விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இங்கே சந்தைப்படுத்த உள்ளனர்.

    காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை இளைஞர்களுக்கு புரிய வைக்கவும், உள்நாட்டு சந்தை பொருட்களை வாங்கத் துாண்டும் நோகிலும் பல்வேறு மாநிலங்களின் மூலிகை மருந்து, மரபு கட்டுமானம், சூழல் சுற்றுலா மற்றும் கைவினைக் கலைஞர்களின் ஸ்டால்கள் இடம்பெறுகின்றன.

    சுதந்திர வரலாற்றிலும் தொன்மையிலும் மதுரைக்கு என்று தனிப்பெருமை உள்ளது. அதை காட்சிப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை சாயமிடுதல், மாடித்தோட்டம், சிறுதானிய சமையல் விளக்கப் பயிற்சியும் நடைபெறவுள்ளது.

    செப்டம்பர் 22ஆம் தேதி காலநிலை மாற்றம் குறித்த நிபுணர்களின் கருத்தரங்க அமர்வு, 23ஆம் தேதி இயற்கை விவசாயம், 24ஆம் தேதி கிராமத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கைவினைப்பொருட்கள் குறித்தும், செப்டம்பர் 25ஆம் தேதி புதுமை, சமூகநலன் சார்ந்த விஷயங்கள் குறித்து இளைஞர்களுக்கு விளக்கப்பட இருப்பதாகமியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி